வருங்கால பிரதமர் வாழ்க.. பிரிட்டன் மக்கள் ஏன் ஆபாச நடிகையை வாழ்த்தினார்கள் தெரியுமா?
லண்டன்: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிந்து செல்ல வேண்டும் என்று வாக்களித்த பிறகுதான், அப்படி பிரிந்து சென்றால் என்னவாகும் என்ற கேள்வியை கூகுளிடம் பல யூ.கே. சிட்டிசன்கள் கேட்டதை கூகுகள் டிரெண்ட் அம்பலப்படுத்தியது.
அந்த கூத்தையே மக்கள் மறக்காத நிலையில் இன்னொரு அவசர பிழையையும் செய்து வைத்துள்ளனர் சூரியன் மறையாத நாடு என ஒரு காலத்தில் பெருமையடித்துக் கொண்ட பிரிட்டீஷ் நாட்டுக்காரர்கள்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிவதை தொடர்ந்து, தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் நாளை பதவி விலக உள்ளார்.

புதிய பிரதமர்
முன்னாள் உள்துறை செயலாளரான தெரேசா மே, புதிய பிரதமராக அரியணை ஏற உள்ளார். தெரேசா பெயரை கன்சர்வேட்டிவ் கட்சி ஒரு மனதாக அறிவித்ததும், அவருக்கு வாழ்த்துக்கள் குவியத் தொடங்கின.
|
ஆபாச பட நடிகை
இதில்தான் உணர்ச்சிவசப்பட்டு சிக்கிக்கொண்டனர் பிரிட்டீஷ்காரர்கள். தெரேசா மே-க்கு டிவிட்டரில் வாழ்த்து சொல்வதற்கு பதிலாக, ஆபாச பட நடிகை தெரேசா மே-க்கு மென்ஷன் செய்து பிரதமராகிறீர்களாமே, வாழ்த்துக்கள் என கூறத் தொடங்கியுள்ளனர்.

ஹையோ.. ஹையோ
10 ஆயிரம் பாலோவர்களை மட்டுமே வைத்திருந்த அந்த கவர்ச்சி நடிகையின் டிவிட்டர் ஹேண்டிலில் மளமளவென ஃபாலோவர்கள் கூட்டம் மொய்க்க தொடங்கியது. முதலில் திருதிருவென விழித்தாலும், லேட்டாக இதை புரிந்து கொண்ட தெரேசா மே, "என்னை பிரதமர் என மக்கள் நினைத்துக்கொண்டார்களே. இவர்கள் எவ்வளவு மெத்தனமாக உள்ளனர்" என கீச்சியுள்ளார்.

ஒரு எழுத்து பிழை
Theresa May என்று எழுதினால் தற்போது பிரதமராக பதவி ஏற்க உள்ள நபரை குறிக்கும். அதுவே Teresa May என்று எழுதினால் ஆபாச நடிகையை குறிக்கும். இவை இரண்டிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் ஒரே ஒரு எழுத்து H தான். ஹெச்சில்தான் கோட்டை விட்டுள்ளனர் பிரிட்டன் மக்கள்.

வியாபாரம் ஜோர்
பாலோவர்கள் மொய்ப்பதை பார்த்ததும், தனது அரை நிர்வாண போட்டோவை வாங்க விருப்பம் உள்ளவர்கள் பணம் செலுத்தலாம் என சந்தடி சாக்கில் வியாபாரத்தை தெரேசா மே ஆரம்பித்ததுதான் இதில் ஹைலைட்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications