கொள்ளையடிக்க சென்ற இடத்தில் தூங்கிய திருடன்.. காத்திருந்து எழுப்பிவிட்ட ஸ்காட்லான்ட் போலீஸ்
கொள்ளையடிக்க சென்ற இடத்தில் தூங்கிய திருடன் ஒருவனை ஸ்காட்லான்ட் போலீஸ் விடியும் வரை காத்திருந்து பின் கைது செய்து இருக்கிறது.
எடின்பர்க்: ஸ்காட்லான்ட் தலைநகர் எடின்பர்க்கில் வீடு ஒன்றில் கொள்ளையடிக்க சென்ற திருடன் ஒருவன் கொள்ளையடித்துவிட்டு அதே இடத்தில் தூங்கி இருக்கிறான். இந்த விஷயம் தெரிந்த போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறது.
மேலும் அவர் குறித்து காமெடியாக தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதி இருக்கிறது ஸ்காட்லான்ட் போலீஸ். தற்போது அந்த திருடனின் செயல் சோஷியல் மீடியா முழுக்க வைரல் ஆகி இருக்கிறது.
பலரும் அவர் குறித்து மிகவும் காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அந்த திருடன் தூங்கியது மட்டும் இல்லாமல் இன்னும் நிறைய காமெடியான செயல்களையும் செய்து இருக்கிறார்.
|
திருடிய இடத்தில் தூக்கம்
ஸ்காட்லான்ட் தலைநகர் எடின்பர்க்கில் உள்ள ஒரு வீட்டில் நேற்று ஒரு கொள்ளை சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த கொள்ளையில் ஈடுபட்ட திருடன் கொள்ளையை முடித்துவிட்டு அங்கேயே குட்டி தூக்கம் போட்டு இருக்கிறான். இதை அறிந்த போலிஸ் காலையில் அவனை கைது செய்து இருக்கிறது. அவனின் இந்த செயலை குறித்து தனது டிவிட்டரில் காமெடியாக எழுதியும் உள்ளனர்.

உண்ட மயக்கம்
மேலும் அந்த திருடன் அந்த இடத்திலேயே படுத்து தூங்கியதும் இல்லாமல் அங்கு இருந்த சாப்பாட்டையும் சாப்பிட்டு இருக்கிறான். சாப்பிட்ட மயக்கத்திலேயே அவன் தூங்கியதாக கூறப்படுகிறது. அவன் கொள்ளை அடிப்பது நடுஇரவிலேயே போலீசுக்கு தெரிந்து இருந்தாலும் அவர்கள் காலையில் தான் அவனை கைது செய்து இருக்கிறார்கள். தூங்கி எழும் போது சர்ப்ரைசாக கைது செய்யவே இப்படி செய்திருக்கிறார்கள்.
|
வைரல் ஆன திருடன்
இந்த நிலையில் அந்த டிவிட்டை தொடர்ந்து அந்த திருடன் ஒரே நாளில் வைரல் ஆகி இருக்கிறான். அதன்படி ஒருவர் ''எப்படி அந்த திருடனை எழுப்பிவிட்டீங்கன்னு அப்படியே கதை மாதிரி சொல்லுங்களே ?'' என்று காமெடியாக கமெண்ட் செய்து உள்ளார்.
|
நானும் அப்படித்தான்
அதேபோல் இவரும் இந்த திருடன் குறித்து காமெடியாக எழுதியுள்ளார். அதில் ''நானெல்லாம் திருட போனா கண்டிப்பா இப்படித்தான் தூங்குவேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பலர் அவரை கிண்டல் செய்து டிவிட் செய்துள்ளனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications