இவன் என்னடா முத்தம் கொடுத்துட்டு போறான்.. திருடன்னா குத்துவாங்க.. வெட்டுவாங்க.. இது புதுசா இருக்கே
திருடன் ஒருவன் பாட்டிக்கு முத்தம் தந்துவிட்டு போயுள்ளான்
Recommended Video
பிரேசிலியா, பிரேசில்: பிரேசில் நாட்டில் ஒரு நூதன சம்பவம் நடந்துள்ளது. அதாவது திருட வந்த இடத்தில் பாட்டிக்கு ஒரு திருடன் முத்தமிட்ட சம்பவம்தான் அது.
பிரேசில் நாட்டில் உள்ள அமரான்டே என்ற இடத்தில் பார்மசி ஒன்று உள்ளது. அந்த பார்மசி கடைக்கு ராத்திரியில் 2 பேர் திருட வந்துள்ளனர்.
முகமூடி அணிந்து வந்த அந்த இருவரும் கடையில் இருந்த கடை உரிமையாளர் சாமுவேல் அல்மெடியாவிடம் நாங்க திருட வந்துள்ளோம் என்று கூறி அவரை அமைதியாக அமரச் சொன்னார்கள். அக்கடையில் அப்போது கடை உரிமையாளர் தவிர ஒரு பாட்டியும் ஏதோ மருந்து வாங்க வந்திருந்தார்.

அதிர்ச்சி
பின்னர் ஒரு திருடன் பாட்டிக்கு பக்கத்தில் நின்று கொள்ள இன்னொருவன் உள்ளே போய் பணம் உள்ளிட்டவற்றை எடுக்க ஆரம்பித்தான். அப்போது பாட்டி என்ன நினைத்தாரோ திருடனிடம் தன்னிடமிருந்த பணத்தை எடுத்துக் கொடுத்தார். இதைப் பார்த்த திருடன் அதிர்ச்சி அடைந்தான்.

மறுத்தான்
பின்னர் பாட்டியை நெருங்கி நெற்றியில் முத்தமிட்டு, நீங்க அமைதியா இருங்க. உங்க கிட்ட நான் திருட மாட்டேன் என்று கூறி பாட்டியிடமிருந்து பணத்தை வாங்க மறுத்து விட்டான்.

வைரல் வீடியோ
அதன் பின்னர் கடையில் கிடைத்த 1000 டாலர் பணத்துடனும், சில பொருட்களை எடுத்துக் கொண்டும் இரு திருடர்களும் போய் விட்டனர். திருட வந்த இடத்தில் பாட்டிக்கு முத்தம் கொடுத்த திருடன் இப்போது பிரேசில் நாட்டில் பிரபலமாகி விட்டான். இந்த வீடியோவும் வைரலாகப் பரவி வருகிறது.

முத்தமா?
ஆனாலும் போலீஸார் விடுவார்களா என்ன.. இப்போது அந்த குசும்புக்கார திருடனையும், அவனது கூட்டாளியையும் தேடி வருகின்றனர். இதுவரை சிக்கவில்லையாம். சிக்கினால் கண்டிப்பாக போலீஸாரும் முத்தம் தருவார்களா என்பது சந்தேகம்தான்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications