குட்டி நாயா? நாய் குட்டியா? – படிச்சுப் பார்த்தா பாவம் நீங்களே குழம்பிப் போயிருவீங்க!
லண்டன்: இங்கிலாந்தில் வெறும் 11 சென்டி மீட்டர் உயரமே உள்ள நாய் ஒன்று உலகிலேயே மிகவும் குட்டியான நாய் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
ஒரு ஐபோன் உயரமே உள்ள இந்த நாயின் தலை கோல்ப் பந்து சைசில் உள்ளது.
அழகான இந்த குட்டியூண்டு நாயை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

ரோஸ் ஆன்ட்டி வீட்டு நாய்:
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வாழும் 46 வயது பெண் ரோஸ்மேரி மெக்லின்டன். இவரது கணவர் அந்தோணி, பஸ் டிரைவராக இருக்கிறார்.

குப்பை தொட்டியில் கண்டுபிடிப்பு:
கடந்த மார்ச் 30 ஆம் தேதி அந்தோணியும், ரோஸ்மேரியும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஒரு குப்பை தொட்டி அருகே ஒரு எலி ஊர்வது போல தெரிந்தது.

சின்ன குட்டி நாய்:
அருகே சென்று பார்த்த போது, மிக மிக சிறிய நாய் என்பது தெரிந்தது. இதையடுத்து அந்த நாயை வீட்டுக்கு எடுத்து வந்து, உணவு ஊட்டிய போது அதனால் சாப்பிட முடியவில்லை.

இங்க் பில்லரில் பால்:
பிறகு ஒரு இங்க் பில்லரில் பாலை எடுத்து ஊட்டிவிட தொடங்கினர்.லகாசாசி எனும் கலப்பின நாயான இந்த சிறிய நாய்க்கு "டைனி டைசன்" என்று பெயர் சூட்டி வளர்க்க தொடங்கினர்.

பிறப்பிலேயே விநோதம்:
ரோஸ்மேரி, 2 மணி நேரத்துக்கு ஒருமுறை இங்க் பில்லர் மூலம் பால் வழங்கி வருகிறார். இந்த குட்டி நாய் 11 செ.மீ உயரமே உள்ளது. பிறக்கும் போதே மிக சிறியதாக பிறந்ததால், மற்ற நாய்கள் கிட்டே சேர்ப்பதில்லை.

பசிக்குதுமா எனக்கு:
டைனிக்கென தனியாக கூடை தயாரித்து, அதில் வைத்து வளர்த்து வருகின்றனர். இதுதொடர்பாக, ரோஸ்மேரி கூறுகையில், "டைனிக்கு பசிக்கும் நேரத்தில் மெலிதாக குரல் கொடுக்கும். நானும் என் உள்ளங்கையில் ஏந்தி அதற்கு பால் புகட்டுவேன்.

ஆரோக்கியமான நாய் “குட்டி”:
வேறு எதுவும் அதனால் சாப்பிட முடியாது. எனினும், அது ஆரோக்கியமாக இருக்கிறது. இங்கிலாந்திலேயே வேறெங்கும் இதுபோன்ற மிக சிறிய குட்டி நாய் இல்லை.

நானும் வளர்ந்துட்டேனே மம்மி...:
முன்பைவிட இப்போது அதன் உயரம் கொஞ்சம் அதிகரித்து உள்ளது" என்கிறார் பூரிப்பாக. இந்நாய் குட்டி அங்கு அனைவரையும் கவர்ந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications