இந்த வீடியோவை பார்த்த பிறகு யாராவது காதல் 'பிரேக்கப்'னு சொல்லுவாங்க!
பெர்லின்: ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் தனது காதலியை பிரிந்த பிறகு அவருடன் சேர்ந்து பயன்படுத்திய பொருட்களை எல்லாம் இரண்டாக வெட்டி அதை ஈ-பேயில் விற்பனைக்கு போட்டுள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் லாரா என்ற பெண்ணை காதலித்துள்ளார். அவரும், லாராவும் சேர்ந்து 12 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்துள்ளனர். இந்நிலையில் காதல் முறிந்து அவர்கள் பிரிந்துவிட்டனர். காதல் முறிவு என்ற வார்த்தையின் அர்த்தத்தை அவரிடம் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
காதலி பிரிந்து சென்ற கையோடு அவர் வீட்டில் ஒரு முக்கியமான வேலையை பார்த்துள்ளார்.

பொருட்கள்
தானும், காதலியும் சேர்ந்து இத்தனை ஆண்டுகளாக பயன்படுத்திய பொருட்களை பிரித்துக் கொடுக்க முடிவு செய்தார். இதையடுத்து அந்த நபர் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் இரண்டாக உடைத்தார், நறுக்கினார், வெட்டினார்.

கட்டில்
காதலியுடன் சிரித்துப் பேசி மகிழ்ந்த கட்டிலையும், அதில் இருந்த மெத்தையையும் அவர் இரண்டாக வெட்டி ஒரு பாதியை லாராவிடம் கொடுத்துவிட்டு மறுபாதியை ஈ-பேயில் விற்பனைக்கு போட்டுள்ளார்.

கார்
ஓபல் காரை கூட விட்டு வைக்காத அவர் அதையும் இரண்டாக வெட்டினார். காரின் முன்பகுதியை தான் வைத்துக் கொண்டார். பின் பகுதியை லாராவுக்கு கொடுத்துவிட்டார்.

டிவி, ஐபோன், லேப்டாப்
சாம்சங் டிவி, விலை உயர்ந்த ஐபோன் 5 மற்றும் லேப்டாப்பையும் அவர் விட்டுவைக்கவில்லை. அவற்றையும் இரண்டாக உடைத்துவிட்டார் மனிதர்.

கரடி பொம்மை
வீட்டில் இருந்த நாற்காலிகள், சைக்கிள், சோபா, டிவிடிக்கள் அட கரடி பொம்மையைக் கூட இரண்டாக வெட்டிவிட்டார். தனது பங்கு பொருட்களை எல்லாம் புகைப்படம் எடுத்து அவை விற்பனைக்கு என ஈ-பேயில் தெரிவித்துள்ளார்.
வீடியோ
லாராவுக்காக என்ற தலைப்பில் தான் பொருட்களை பாதியாக நறுக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்தவர்கள் மிரண்டு போயுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications