ச்சும்மா….. ஜாலிக்காக 41 பெண்களை போட்டுத் தள்ளிய பிரேசில் வாலிபர்!
ரியோடிஜெனீரோ: வேடிக்கைக்காவும், ஜாலிக்காகவும் 41 பேரைக் கொலை செய்துள்ளார் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது அதிர வைத்துள்ளது.
அனைவரையும் இவர் ரியோடிஜெனீரோ நகரின் புறநகர்ப் பகுதியில் வைத்துக் கொலை செய்துள்ளார். அனைவரையும் கத்தியால் குத்தியே கொலை செய்துள்ளார்.
இதையெல்லாம் தான் ஒரு வேடிக்கைக்காக செய்துள்ளதாக கூறியுள்ளார் கைது செய்யப்பட்டுள்ள 26 வயதான சைல்சன் ஜோஸ் டாஸ் கிரேகாஸ் என்ற அந்த வாலிபர்.

30 வருடம் சிறை தண்டனை:
இவரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர். இவருக்கு 30 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.
பாரபட்சமில்லாமல் கொலை:
இவர் கருப்பர் இனப் பெண்கள், வெள்ளையர் இனப் பெண்கள் என பாரபட்சம் பார்க்காமல் கொலை செய்துள்ளார். இந்தக் குற்றத்தைச் செய்வதற்கு முன்பு தான் குறி வைத்த பெண்களை சில நாட்கள் பின் தொடர்ந்து கண்காணித்து அதன் பிநன்னர் செய்துள்ளதாக போலீஸ் கமிஷனர் பெட்ரோ ஹென்ரிக் மெடினா கூறியுள்ளார்.
சைக்கோ இளைஞர்:
இவர் மன நலம் பாதிக்கப்பட்ட சைக்கோ இளைஞர் என்று போலீஸார் வர்ணிக்கின்றனர்.இவர் இதுவரை பலரைக் கொன்றுள்ள போதிலும் 41 பேரைக் கொன்றதற்கான ஆதாரங்கள்தான் கிடைத்துள்ளன.
37 பெண்களாம்:
இதில் 37 பேர் பெண்கள் ஆவர். கடந்த வருடமாக இவர் கொலை செய்து வந்துள்ளார். கொலையானவர்களில் 3 பேர் ஆண்கள், ஒரு இரண்டு வயதுக் குழந்தையும் அடக்கமாகும்.
த்ரில்க்காக கொலை:
அடிப்படையில் இவர் ஒரு திருடன். தனது 17 வயதில் முதல் கொலையைச் செய்துள்ளார். அதில் த்ரில் கிடைத்தது. இதையடுத்து தொடர்ந்து கொலை செய்ய ஆரம்பித்துள்ளார். ஒரு சமயம், ஒருவரைக் கொலை செய்ய வேண்டும் என்று கேட்டு ஒரு தம்பதி இவருக்குப் பணம் கொடுத்து கொலை செய்துள்ளது. அந்தத் தம்பதியும் தற்போது கைதாகியுள்ளனர்.
துப்பாக்கி ரொம்ப அரிது:
பெரும்பாலும் இவர் கத்தியால் குத்தியும், கழுத்தை நெரித்தும்தான் கொலை செய்வாராம். ரொம்ப அரிதாகத்தான் துப்பாக்கியால் சுட்டு்க கொல்வாராம்.
கொலை செய்தால்தான் தூக்கம்:
எனக்கு யாரையாவது கொலை செய்யாவிட்டால் தூக்கமே வராது. வீட்டுக்குள் அங்குமிங்கும் நடமாடுவேன். கொலை செய்தால்தான் அன்று இரவு என்னால் நிம்மதியாக தூங்க முடியும் என்று கூறி கிலி ஏற்படுத்தியுள்ளார் இந்த வாலிபர்.
மறுபடியும் வருவேன்:
சிறைக்குப் போய் விட்டு திரும்பி வந்தாலும் இதையேதான் செய்வேன் என்றும் இவர் சீரியஸாகவே கூறுகிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications