என்னா ஒரு சோம்பேறித்தனம்.. இந்த "பக்கி"க்கு நாம கேர்ள் பிரண்ட் தேடிக் கொடுக்கனுமாம்... !
அலபாமா: அமெரி்க்கர்களுக்கு மூளை சற்று சதுரமாக இருக்கும் போல.. விதம் விதமாக வித்தியாசமாக, வில்லங்கமாகத்தான் யோசிக்கிறார்கள். அலபாமாவைச் சேர்ந்த ஒருவர் தனக்கேற்ற காதலியைத் தேடித் தரும் வேலையை அவுட்சோர்சிங்குக்கு விட்டு விட்டு ஹாயாக இருக்கிறார். சரியான ஜோடியைத் தேடித் தருவோருக்கு இவர் பத்தாயிரம் டாலர் பரிசாக தருவாராம்.
கிட்டத்தட்ட கல்யாணத்திற்குப் பெண் தேடுவது போலத் தேடி வருகிறார் இந்த பார்ட்டி.. தம்பியின் பெயர் ரென் லூ யூ. 29 வயதகிறது. அலபாமாவின் பிர்மிங்காம் நகரில் வசித்து வருகிறார்.

இவராக சொந்தமாக சில காதல் முயற்சியில் ஈடுபட்டுப் பார்த்தார். ஆனால் ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. 30 "பிள்ளை"களைப் பார்த்தும் கூட, பழகியும் கூட, யாரும் இவருக்கு செட் ஆகவில்லையாம். எல்லாம் புட்டுக்கிட்டதாம். பார்த்தார், டக்கென்று ஒரு வெப்சைட்டை (dateren.com,) திறந்தார். விளம்பரம் ஒன்றை அதில் போட்டார்.
எனக்கேற்ற நல்ல, அழகிய, மனதுக்கேற்ற, பழகுவதற்கு இனிமையான, பரந்த மனப்பான்மையுடன் கூடிய (நல்லவேளை எங்க அம்மாவுக்குப் பிடித்தார் போன்ற என்று சொல்லாமல் விட்டார்) பெண்ணைப் பார்த்துத் தருவோருக்கு 10,000 டாலர் பரிசாக தரப்படும் என்று போட்டு விட்டார்.
சமீபத்தில்தான் இவர் ஹார்வர்ட் பிசினஸ் பள்ளியில் பட்டம் முடித்து வெளியே வந்தாராம். தற்போது ஒரு பங்கு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துள்ளார்.
இவர் திறந்துள்ள இணையதளத்தில் தங்களுக்குத் தெரிந்த பெண்களின் புரபைல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், இன்ன பிற தகவல்களை யார் வேண்டுமானாலும் போட்டு விடலாம். யூவுக்குப் பிடித்தால், 6 மாதத்திற்கு மேலும் அந்தப் பெண்ணுடன் வெற்றிகரமாக டேட்டிங் நீடித்தால், ரெக்கமண்ட் செய்த நபருக்கு 10,000 டாலர் பரிசாக வந்து சேருமாம். அதேசமயம், தாங்களாகவே முன்வந்து விண்ணப்பிக்கும் பெண்களுக்கு இந்தப் பரிசு கிடையாதாம்.
மிஸ்டர் லூ.. எதுக்கும் முகத்தை கொஞ்சம் நல்லா கண்ணாடில பார்த்துக்கங்க.. 30 பேரைப் பார்த்தும் தேறாத காதல் இனியாவது தேடி வரப் போகுது...!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications