ஆளில்லா விமானம் மூலம் “பீட்ஸா” டெலிவரி – ரஷ்ய நிறுவனத்தின் புதிய திட்டம் வெற்றி
மாஸ்கோ: ரஸ்யாவின் பீட்ஸா நிறுவனம் ஒன்று ஆளில்லா விமானம் மூலம் பீட்ஸா டெலிவரி சேவையை தொடங்கி வெற்றி பெற்றுள்ளது.
ரஷ்யாவின் சைக்டைவர் பகுதியில் "டோடோ பீட்ஸா" நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வர்த்தக ரீதியான தாரக மந்திரமே 60 நிமிடங்களுக்குள் பீட்ஸா டெலிவரி என்பதுதான். இதனால் அங்கு நம்பர் 1 நிறுவனமாக விளங்கி வருகின்றது.

ஆன்லைன் தயாரிப்பு வீடியோ:
இந்நிறுவனத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் பீட்ஸாவிற்கான ஆர்டரைப் பெற்றவுடன், அதன் தயாரிப்பை வாடிக்கையாளருக்கு ஆன்லைன் மூலமாக நேரடியாக ஒளிப்பரப்பு செய்வதுடன், ஒருவேளை குறிப்பிட்ட நேரத்தைவிட அதிகமாக ஆகிவிட்டால் பீட்ஸா முழுவதும் இலவசம் என்பதுதான்.

புதிய திட்டம் அறிமுகம்:
இந்நிலையில் பீட்ஸா டெலிவரிக்கான நேரத்தை இன்னும் குறைப்பதற்காக ஒரு புதிய யுக்தியை இந்நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. அதாவது ஆளில்லா விமானம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பீட்ஸா டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளது.

முதல் முறையாய் அறிமுகம்:
இந்த விமானமானது 5 கிலோ எடை வரை சுமக்கும் திறன் உடையது. மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து பீட்ஸா டெலிவரி செய்யும் இந்த ஆளில்லா விமானம். உலகில் முதன்முறையாக இந்த வசதியை அறிமுகம் செய்து வெற்றிபெற்றுள்ளது இந்நிறுவனம்.

ஆளில்லா விமான சேவை:
சோதனை முயற்சியில் பீட்ஸா இணைக்கப்பட்ட அவ்விமானம் வாடிக்கையாளரின் இடத்தை அரைமணி நேரத்தில் வந்தடைந்தது. பின்னர், 20 மீட்டர் உயரத்தில் இருந்து ஒரு கேபிள் மூலம் பீட்ஸா வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டது.

வர்த்தக ரீதியான வெற்றி:
பல நாடுகள் இச்சோதனை முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், வர்த்தக ரீதியாக டோடோ பீட்ஸா நிறுவனம்தான் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications