இணையத்தைக் கலக்கும் கொலைவெறி இசை!
ஒரு கொலைவெறி பாட்டு போட்டு உலகப் புகழ் பெற்றார் அனிருத்... இந்த பாட்டு பாடி பிரதமருடன் விருந்து சாப்பிட்டார் தனுஷ். இந்த உலகமே உச்சரித்த கொலைவெறி பாட்டின் இசை பிரபல குளிர்பான விளம்பரம் மூலமாக மீண்டும் ஹிட் ஆகி வருகிறது.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய முதல் படமான ‘3' கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இப்படத்தில் தனுஷ், ஸ்ருதி, சிவகார்த்திகேயன், பிரபு, பானுப்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.இப்படத்தின் மூலமாக அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அதிரி புதிரி ஹிட்
இப்படத்தில் தனுஷ் எழுதி பாடிய கொலை வெறி பாடல் பெரிய ஹிட்டடித்தது. இப்பாடலை பாடாத உதடுகளே இல்லை எனலாம். அன்றைய பாரத பிரதமர் மன்மோகன் சிங் இப்பாடலால் கவரப்பட்டு நடிகர் தனுஷை அழைத்து விருந்து வைத்தார்.

கொலைவெறி
இந்திய நாட்டின் பிரதமர் இப்படி செய்யலாமா? என்ற கேள்வி கேட்டாலும் கொலைவெறியை உச்சரிக்காத உதடுகளே இல்லை எனலாம். உலகம் முழுவதும் இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
துருக்கி நாட்டில்
இந்நிலையில் துருக்கி நாடுகளில் இப்பாடல் பிரபலமடைந்துள்ளதால் பிரபல குளிர்பானமானம் தனது விளம்பரத்தில் இந்தப்பாடலின் டியூனை பயன்படுத்தியுள்ளனர்.

அசத்தல் நடனம்
அதுமட்டுமில்லாமல் ‘கொல வெறி' பாடல் திரையில் எப்படி வந்ததோ அதே போல நடன அசைவுகளையும் அமைத்து அந்த விளம்பரத்தை படமாக்கியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில்
தற்போது இப்பாடலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இனி கொலைவெறி என்று பாடுவதை விட இனி குளிர்பானத்தின் பெயரைச் சொல்லித்தான் பாடுவார்கள் போல.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications