சந்திரமுகி ஜோதிகா கட்டிலைத் தூக்கினார்.. நியூயார்க் ஜென்னியோ காரைத் தூக்கினார்.. ஒரு பரபர வைரல்!
லாஸ் ஏஞ்செல்ஸ்: நியூயார்க்கில் கண்ட இடத்தில் காரை நிறுத்துவது சர்வ சாதாரணமாகி விட்டது. யாரும் ரூல்ஸைப் பொருட்படுத்துவதில்லை.
இத்தனைக்கும் பார்க்கிங் விதிமுறை கடுமையாக உள்ள நகரம் நியூயார்க். அப்படியும் சிலர் இதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும் தொடர்கிறது. இப்படிப்பட்டவர்களுக்கு புத்தி புகட்டும் வகையில் அதிரடி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர்.
அது என்ன.. இதோ படியுங்கள்...
ஒரு டாக்ஸி டிரைவர். பார்க்கிங் டிக்கெட்டை வாங்கிய பின், தனது காரை எடுக்காமல் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக ரோட்டில் நிறுத்தி வைத்து இருந்தார். டாக்ஸி பார்க்கிங்கை ஒழுங்குபடுத்தும் பெண்ணான ஜென்னி ருய்சா (28), அந்த டாக்ஸி டிரைவரிடம் (பாபி கோஸ்டாஸ்) சென்று உங்களது காரை எடுத்துச் சென்று ஓரமாக நிறுத்துங்கள் என்று கூற, அதனைக் கண்டு கொள்ளாத பாபி கோஸ்டாஸ் காருக்குள் குனிந்து ஏதோ மும்முரமாக செய்து கொண்டிருந்தார்.
மீண்டும் ஜென்னி பாபியிடம் காரை நகர்த்துமாறு கேட்க, அதற்கு பாபி நீதானே டிக்கெட் கொடுத்து இருக்கிறாய் நான் ஏன் நகர்த்த வேண்டும் என்று சில மோசமான வார்த்தைகளைக் கொண்டு அந்தப் பெண்ணை திட்டினார். ஜென்னியோ மீண்டும் மீண்டும் பொறுமையாக சொல்லிப் பார்த்தார். ஆனால் டிரைவர் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து அமைதியாக கார் முன்பு வந்த ஜென்னி, யாரும் எதிர்பாராத வகையில், சந்திரமுகியில் கட்டிலை டக்கென்று ஜோதிகா தூக்குவது போல, காரைப் பிடித்து அலேக்காக தூக்கினார். நடந்து சென்று கொண்டிருந்த நியூயார்க் வாசிகள் அப்படியே திகைத்து நின்று, பார்க்க ஆரம்பிக்க அந்த இடத்தில் கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது.
ஆனால் அந்த டிரைவர் அப்பொழுதும் காரை நகர்த்தவில்லை, இதனைப் பார்த்த பொதுமக்கள் நீ இப்போது காரை எடுப்பது நல்லது என்று ஆளாளுக்கு அந்த டிரைவருக்கு அறிவுரை கூற ஆரம்பித்து விட்டனர். சிலபேர் அந்தக் காரை வந்து தூக்கிப் பார்க்க முடிவுசெய்து பாதியில் பின்வாங்கி செல்ல, சற்று நேரத்தில் அந்த இடமே கலகலப்பாக மாறிவிட்டது.
தற்போது இந்த வீடியியோ யூடியூபில் அப்லோட் செய்து சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான பேர் இதனைப் பார்த்து ரசித்து உள்ளனர். தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது, இந்த வீடியோ.
நிற்க.. இது நிஜமான சம்பவம் அல்ல ஒரு செட்டப் சம்பவம். காரைத் தூக்கிய பெண் காமெடி நடிகை ஜென்னி ரூய்சா. டிரைவர் உள்பட அனைவருமே நடிகர்கள்தான். இதேபோல நகரின் பல பகுதிகளிலும் செய்து கலக்கியுள்ளனர். எல்லாம் காரை சரியான இடத்தில் பார்க் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான்.
நல்ல விஷயம்தானே.. எங்க ஊர் பக்கமும் ஒரு ரவுண்டு அடிச்சுட்டுப் போங்கப்பா.. சொல்லச் சொல்ல கேக்க மாட்டேங்கிறாங்க எங்காளுக!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications