பதினைந்து நாளாக தொடரும் தாமஸ் காட்டுத் தீ.. பற்றி எரியும் கலிபோர்னியா நகரம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகள் தாமஸ் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகள் தாமஸ் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதுமட்டும் இல்லாமல் நகரம் மொத்தத்தையும் 6 க்கும் மேற்பட்ட காட்டுத் தீ சூழந்து இருக்கிறது.
இந்த காட்டுத் தீ உருவாகி இரண்டு வாரத்திற்கும் அதிகமாகிவிட்டது. இதன் காரணமாக மொத்த கலிபோர்னியா நகரமே நாசமாகி இருக்கிறது.
இது லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தை தாக்குவதற்கு முன்பே நிறுத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியிலும் பல்வேறு இடங்களை இந்த தீ நாசம் செய்து இருக்கிறது. இன்னும் இந்த தீ கட்டுப்படுத்த முடியாமல் பரவிக் கொண்டு இருக்கிறது.

தீ எப்படி தொடங்கியது
அமெரிக்காவில் காட்டுத் தீ அதிகம் ஏற்படும் பகுதிகளில் கலிபோர்னியா முக்கிய இடத்தில் இருக்கிறது. இந்த ஒருமாதம் மட்டுமே ஒரே நேரத்தில் கலிபோர்னியாவில் மொத்தம் தற்போது 6 காட்டுத் தீக்கள் உருவாகி உள்ளது. ஒரே மாதத்தில் கலிபோர்னியாவில் 6 தீ ஏற்படுவது இதுவே முதல் முறை. இந்த காட்டுத் தீ முதலில் வென்சுரா என்ற பகுதியில் உருவானது. பின் சாண்டா பார்ப்பாரா பகுதியில் உக்கிரமானது.

இப்போது எப்படி இருக்கிறது
இந்த காட்டுத் தீயில் தாமஸ் என்ற காட்டுத் தீயை அணைப்பது மட்டும் மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது. இது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை அடைவதற்குள் எப்படியாவது அணைக்கப்பட்டு விடும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியையும் இந்த தீ கைப்பற்றிவிட்டது. 2,65,000 ஏக்கர் நிலப்பரப்பை லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மட்டும் ஆக்கிரமித்து இருக்கிறது. இந்த தீ மொத்தமாக ஆக்கிரமித்த பகுதிகள் லண்டனின் அளவை விட அதிகமாகி விட்டது.

திணறல்
இதனால் ஏற்பட்ட புகை நியூயார்க் நகரத்தில் கூட பரவி இருக்கிறது. 1000 தீ அணைப்பு வாகனங்களும், 32 ஹெலிகாப்டர்களும், 8,500 தீயணைப்பு வீரர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை 750 கோடிக்கும் அதிகமாக இதனால் செலவு ஆகி இருக்கிறது. எவ்வளவு இழப்பு என்று தீ அணைந்த பின்பே கண்டுபிடிக்க முடியும். 3000 கோடிக்கும் அதிகமாக கண்டிப்பாக இழப்பு ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மரணம்
இதுவரை கணக்குப்படி 100க்கும் அதிகமானோர் மரணம் அடைந்து உள்ளனர். ஆனால் தீ காரணமாக மரணம் குறித்த கணக்குகள் சரியாக தெரிவிக்கப்படவில்லை. 3,00,000 பேர் கலிபோர்னியா விட்டு வெளியேறிவிட்டனர். 10,000க்கும் அதிகமான வீடுகள் அப்படியே தீக்கு இரையாகி இருக்கிறது. அமெரிக்க வரலாற்றில் ஏற்பட்ட 7 பெரிய காட்டுத் தீயில் இதுவும் ஒன்று. இதனால் அங்கு கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது .
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications