வாவ்.. 15 கோடி வருஷம் முன்பு வாழ்ந்த டைனோசர்கள் கால் தடம் சீனாவில்.. வியந்து போன ஆய்வாளர்கள்!
பீஜிங்: 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கருதப்படும் டைனோசர்களின் ஆயிரக்கணக்கான கால் தடங்கள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து அழிந்து போன உயிர்களில் ஒன்று டைனோசர். மிகப்பெரிய உயிரினமான இது முற்றிலும் அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்த பெரிய விண்கல் காரணமாக இந்த உயிரினம் அடியோடு அழிந்ததாக கூறப்படுகிறது. எனினும் தற்போது டைனோசர் பூமியில் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை, தடயங்களை திரட்ட விஞ்ஞானிகள் முழு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

4,300 கால் தடங்கள்
இந்த நிலையில், சீனாவின் ஜாங்ஜியாகோவ் மாகாணத்தில் உள்ள ஹேபேய் என்ற பகுதியில் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக சொல்லப்படும் டைனோசர்களின் கால் தடத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதுவும் ஒன்றல்ல..இரண்டல்ல... 4,300 கால் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 9 ஆயிரம் சதுர மீட்டர் அளவு கொண்ட கால் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. புதைபடிவ கால்தடங்களாக கண்டறியப்பட்டுள்ளவைகளில் டைனோசர்களின் நகங்களின் பதிவுகளும் அடங்கியிருக்கின்றன.

உயரம், எடை மற்றும் நடக்கும் வேகம்
முதல் முறையாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது விஞ்ஞான உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. தற்போது கிடைத்துள்ள தடயங்கள் மூலம் டைனோசர்களின் உயரம், அதன் எடை மற்றும் அது நடக்கும் வேகம் ஆகியவற்றை தீர்மானிக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தற்போது கிடைத்துள்ள தடயங்கள் டைனோசர்களின் நான்கு இனங்களை வகைப்படுத்துவதாக உள்ளது.

இரண்டு வகையான டைனோசர்கள்
எனினும் இந்த நான்கும் வகைப்படுத்தப்படவில்லை. புதைபடிவங்களில் கிடைத்துள்ள ஒரு டைனோசரின் இனம் என்னும் அடையாளம் கண்டுபிடிக்கப்படாததாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகள் என இரண்டு வகையான டைனோசர்களின் கால் தடங்களும் இதில் கிடைத்துள்ளன. விலங்கு உண்ணிகளை சேர்ந்த டைனோசர்கள் அளவில் சிறியதாக தென்படுவதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

15 மீட்டருக்கும் மேலானவையாக
மாமிச உண்ணிகள் வெறும் ஐந்து அல்லது நான்கு மீட்டர்கள் மட்டுமே இருந்து இருக்கலாம் என்றும் தாவர உண்ணிகள் 15 மீட்டருக்கும் மேலானவையாக இருந்து இருக்கக்கூடும் என்று தடயங்கள் காட்டுவதாக ஆய்வாளர்கள் குழு சொல்கிறது. டைனோசர் வாழ்ந்த காலத்தில் தண்ணீர், தாவரங்கள் என செழிப்பான பகுதியாக இது நிறைந்திருக்கிறது. இதனால், இந்த பகுதிகளில் டைனோசர்கள் தங்கள் வாழ்விடமாக்கி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். குறிப்பாக தாவர உண்ணி வகையை சேர்ந்த டைனோசர்களுக்கு சொர்க்கபுரியாக இது இருந்து இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications