வெப்சைட் பார்க்க டோக்கன் எடுத்து கியூவில் நிற்கும் வாசகர்கள்! அப்படி என்ன இருக்கு அதில்?
வாஷிங்டன்: வெப்சைட்டுகள் எப்போதும் ஓபன் செய்து படிக்க வசதியானவை. ஆனால், உலகில் ஒரு வெப்சைட்டை பார்க்க டோக்கன் எடுத்து மக்கள் கியூவில் காத்திருக்கும் விநோதம், நடந்துகொண்டுள்ளது என்பது தெரியுமா உங்களுக்கு?
அந்த வெப்சைட்டின் பெயரே விநோதமானதுதான். ஈர்க்க கூடியதும். ஆம், வெப்சைட் பெயர் 'மோஸ்ட் எக்ஸ்குளூசிவ் வெப்சைட்' (Most Exclusive Website).
பெயருக்கேற்பவே, சற்று பிரத்யேக தன்மையுடன் அமைத்துள்ளார் வெப்சைட்டை உருவாக்கிய அமெரிக்கரான ஜஸ்டின் போலே. அப்படி என்ன பிரத்யேகதன்மை தெரியுமா? அந்த தளத்தை ஒரு நேரத்தில் ஒருவர் மட்டும்தான் பயன்படுத்த முடியும். அந்த ஒருவரும் ஒரு நிமிடம் மட்டும்தான் தளத்தை பயன்படுத்த முடியும். ஒருவர் பயன்படுத்தி முடிக்கும் வரை மற்றவர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டும்.
இதற்காக முகப்பு பக்கத்தில் இருந்து அனுமதி சீட்டு வாங்கிக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட எந்த நேரத்தில் இந்த தளத்தில் நுழைந்தாலும், இத்தனை ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர், நீங்களும் வரிசையில் நிற்க அனுமதிச்சீட்டு வாங்கி கொள்ளவும் என தெரிவிக்கப்படுகிறது. இப்படி காத்திருக்க வேண்டியிருப்பதும், ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே தளத்தை பயன்படுத்தலாம் எனும் பிரத்யேக தன்மையும்தான் இணையவாசிகளை இந்த தளத்தை நோக்கி ஈர்க்க வைத்துள்ளது.
இதுவரை 2,65,000 பேருக்கு மேல் இந்த தளத்தை பயன்படுத்த அனுமதிச்சீட்டு இண்டர்நெட் திறந்தவெளி தன்மை கொண்டதாக இருப்பதால், அதற்கு எதிர்மாறாக ஒரு இணையதளத்தை அமைத்தால் என்ன என்று யோசித்து இந்த பிரத்யேக தளத்தை உருவாக்கியதாக கூறியுள்ளார்.
மார்ச் மாதவாக்கில் இந்த தளத்தை உருவாக்கியிருந்தபோதிலும், உடனடியாக பெரும்பான்மை மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. பின்னர் ஜானி வெப்பர் எனும் வலைப்பதிவாளரின் இணையத்திலும், ரெட்டிட் என்ற சமூக வலைத்தளத்திலும் இந்த வெப்சைட் பெயர் வெளியாகத் தொடங்கியதும், ரசிகர்கள் மொய்க்க தொடங்கிவிட்டனர்.
இந்த இணையதளத்தை ஒரு நிமிடம் பயன்படுத்தும் போது என்னதான் செய்ய முடிகிறது என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். அதை நீங்கள் முயன்று பார்த்து கண்டுபிடிப்பதே சரியானதாக இருக்கும் என்பதால் விடை சொல்ல முடியாது. ஏனெனில் ஆர்வம்தான் இந்த வெப்சைட்டை உயிர்ப்போடு வைத்துள்ளது. ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு நீங்களே சொல்லுங்கள். அந்த இணையதள முகவரி: http://mostexclusivewebsite.com/
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications