எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் அடாவடி.. அத்துமீறிய தாக்குதலில் 10 இந்தியர்கள் உயிரிழப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதாலால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் ராணுவம், எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ஷெல் ரக தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 10 இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடியை கொடுத்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு கடந்த சில நட்களாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 12 நாட்களாக ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, துப்பாக்கிச் சூடு நடத்தியது.

9 இடங்களில் ஏவுகணை தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், நௌஷேரா மற்றும் அக்னூர் பகுதிகளுக்கு எதிரே உள்ள நிலைகளில் இருந்து சிறிய ரக துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய காத்துக் கொண்டு இருந்தது.
கோட்லி, பஹ்வல்பூர் மற்றும் முசாபராபாத உள்பட 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம பதிலடி கொடுத்தது. இந்தியா அதிரடி தாக்குதலை நடத்தியிருப்பதை பாகிஸ்தான் ராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் நகரைச் சுற்றியுள்ள மலைகளுக்கு அருகிலுள்ள பகுதியில் நள்ளிரவுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடத்தியுள்ளது.
10 இந்தியர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தான் எதிர்பாராத நேரத்தில் இந்திய ராணுவத்தின் முப்படைகளும் இந்த தாக்குதலை நடத்தியுள்ளன. இந்தியாவின் இந்த தாக்குதலால் அதிர்ச்சி அடைந்து இருக்கும் பாகிஸ்தான், எல்லையில் அடாவடியாக தாக்குதலை தொடங்கியுள்ளது. பீரங்கிகளை கொண்டு ஷெல் தாக்குதலை எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தியது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.
எனினும் பூஞ்ச் மற்றும் ராஜோவ்ரி பகுதியில் போர் நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த கோழைத்தனமான தாக்குதலில் 10 இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ராணுவமும் இதற்கு தகுந்த பதிலடியை கொடுத்து வருதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆபரேஷன் சிந்தூர்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து இந்தியா ராணுவம் ஆபரேஷன் சிந்தர் மூலம் தககுதல் நடத்தியுள்ளது. ஏவுகணை வீசி இந்திய ராணுவம் இந்த தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் அத்துமீறலையடுத்து கர்னாஹ் பகுதியில் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது வரை இரு தரப்புக்கும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் மோதல் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிரது
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications