உலக அழிவின் தொடக்கமா? ஒரே நாளில் அடுத்தடுத்து தாக்கிய 3 வலிமையான பூகம்பங்கள்.. அச்சத்தில் மக்கள்
சிலி: இன்று வெறும் சில நாட்களில் அடுத்தடுத்து 3 பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள பசிபிக்- அண்டார்டிக் ரிட்ஜ் பகுதியில் இன்று காலை ஒரு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இப்போது மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோல ரஷ்யாவிலும் வலிமையான பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதுபோல அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இன்று அடுத்தடுத்து பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள பசிபிக்- அண்டார்டிக் ரிட்ஜ் பகுதியில் 6.4 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது.

நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ (6.2 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சிலி நாட்டின் வால்பரைசோவில் உள்ள ஹங்கா ரோவாவின் தென்மேற்கே 3,440 கி.மீ (2,137 மைல்) தொலைவிலும், நியூசிலாந்தின் சத்தாம் தீவுகளில் உள்ள வைடாங்கியின் கிழக்கே 3,545 கி.மீ (2,200 மைல்) தொலைவில் மையம் கொண்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அதேநேரம் குறிப்பிடத்தக்க வகையில், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கரையோரப் பகுதிகளுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது.
கிரீன் அலர்ட்
நிலநடுக்கம் தொடர்பான உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகள் தொடர்பான எச்சரிக்கையில் இது க்ரீன் அலர்ட் வெளியிட்டுள்ளது. அதாவது சேதங்கள் அல்லது உயிரிழப்புகளுக்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும் அப்பகுதியில் உள்ள கட்டிடங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து தாக்கும் பூகம்பங்கள்
இந்த வலுவான நிலநடுக்கத்திற்கு முன்னதாக, இன்று அதிகாலை 5.2 ஆகப் பதிவான மற்றுமொரு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல ரஷ்யாவிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் குரில் தீவுகளில் இன்று 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதுள்ளது. இப்படி குறுகிய காலகட்டத்தில் 3 நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications