தாலிபன்களால் பாகிஸ்தான் டிவி ஊழியர்கள் சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் தொலைக்காட்சி நிலைய ஊழியர்கள் 3 பேர் தாலிபன்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தொலைக்காட்சி நிலையத்துக்கு அருகே வேன் ஒன்றில் ஊழியர்கள் பணிக்காக தயாராகிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது துப்பாக்கியுடன் 4 பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து ஊழியர்களை சுட்டுத் தள்ளியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பெற்றுள்ள தாலிபன் அமைப்பு தலைவர் சஜ்ஜாத் முகமந்த், இஸ்லாமுக்கும் தாலிபன்களுக்கும் எதிராக செய்தி வெளியிடும் ஊடகங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.
முன்னதாக இதே தொலைக்காட்சி நிலையத்தின் மீது தாலிபன்கள் இரண்டு முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு 5 செய்தியாளர்கள் தாலிபன்களால் கொல்லப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications