ஒரு பூமியவே நம்மாள சமாளிக்க முடியலை.. இதுல 3 பூமியை புதுசா கண்டுபிடிச்சிருக்காங்கலாம்!
நியூயார்க்: பூமியைப் போலவே உயிரினங்கள் வாழத் தகுதியான 3 புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியைப் போன்றே உயிர்கள் வாழக்கூடிய புதிய கிரகங்கள் உள்ளனவா அவற்றில் வேற்றுக்கிரகவாசிகள் வசிக்கின்றனரா என்பது குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பூமியிலிருந்து 21 ஒளி ஆண்டுகள் தொலைவில், பூமியைப் போலவே 3 புதிய கிரகங்கள் இருப்பது அதிநவீன தொலைநோக்கி மூலம் தெரிய வந்துள்ளது.

அதிநவீன டெலஸ்கோப் மூலம்...
ஸ்பெயினில் உள்ள ஒரு தீவில் அமைக்கப்பட்டுள்ள ஹார்ப்ஸ் என்ற அதிநவீன டெலஸ்கோப்பான ‘ மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது பூமி சூரியனைச் சுற்றி வருவது போலவே, 3 கிரகங்களும் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருவது கண்டுபிடிக்கப் பட்டது.

புதிய கிரகங்கள்...
இந்தப் புதிய கிரகங்களுக்கு ‘எச்டி 219134' எனப் பெயரிடப் பட்டுள்ளது. மேலும் இந்தப் புதிய கிரகங்களில் பூமியைப் போன்றே மேற்பரப்பு அடர்த்தியுடன் காணப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மனிதர்கள் வாழத் தகுதி...
சூரியனிடமிருந்து பூமி அதிக நெருக்கத்திலும் இல்லாமல், தொலைவிலும் இல்லாமல் சரியான தொலைவில் இருப்பது போலவே, இந்தக் கிரகங்களும் அதன் நட்சத்திரத்தில் இருந்து சரியான தொலைவில் இருப்பது தெரிய வந்துள்ளது.

தண்ணீர், காற்று
இதனால், இவற்றில் மனிதர்கள் வாழ்வதற்கான காற்று, நீர் போன்றவை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

வெறும் கண்களாலேயே...
அதிக வெளிச்சத்துடன் காணப்படும் இந்தப் புதிய கிரகங்களை இரவு நேரங்களில் வெறும் கண்களாலேயே காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications