கோல்ப் வீரரின் முன்னாள் மனைவியுடன் டைகர் உட்ஸ் ரொமான்ஸாமே!

Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சலெஸ்: பெண் விவகாரத்தி்ல் சிக்கி சீரழிந்து போய் குடும்பத்தை இழந்து, மனைவி, குழந்தையை இழந்து தரவரிசையில் ரொம்ப ரொம்ப கீழே போய் விட்ட டைகர் உட்ஸ், மீண்டும் கோல்ப் விளையாட்டில் துள்ளி எழுந்து வருகிறார். அதேபோல ரொமான்ஸ் வாழ்க்கையிலும் அவர் மறுபடியும் முன்னேறி வருகிறாராம்.

கடந்த மே மாதம்தான் அமெரிக்க ஸ்கீ வீராங்கனை லின்ட்சே வேன் என்பவரைப் பிரிந்து விலகினார். அதே வேகத்தில் தற்போது இன்னொரு பெண்ணுடன் ரொம்ப நெருக்கமாக ஜாயிண்ட் ஆகி விட்டாராம்.

உண்மையில் லின்ட்சேவுடன் நெருக்கமாக இருந்த காலத்தில் இந்தப் பெண்ணையும் சாட்டிலைட் போல பயன்படுத்தியதால்தான் லின்ட்சே கடுப்பாகி துண்டித்து விட்டாராம் - உறவை.

பெண் பித்து.. எல்லாம் போச்சு

பெண் பித்து.. எல்லாம் போச்சு

39 வயதான டைகர் உட்ஸ் ஒரு காலத்தில் கோல்ப் ராஜாவாக திகழ்ந்தவர். நம்பர் ஒன் வீரராக வலம் வந்த அவர் இன்று 200 இடங்களைத் தாண்டிப் போய் விட்டது. எல்லாவற்றுக்கும் காரணம் அவர் பெண்களுடன் வைத்திருந்த சகவாசம்தான்.

மீண்டும் மீண்டும் காதல்

மீண்டும் மீண்டும் காதல்

இந்த நிலையில் மனைவி, குழந்தையை இழந்த பின்னர் அமைதி காத்து வந்த டைகர் உட்ஸ், பின்னர் லின்ட்சே வேனுடன் காதல் கொண்டார். ஆனால் கடந்த மே மாதம் இந்தக் காதல் பிரிந்து போனது.

ஏன் பிரிந்தார்கள்

ஏன் பிரிந்தார்கள்

இந்தப் பிரிவுக்கு காரணம் டைகரின் சேட்டைதானாம். அதாவது லின்ட்சேவுடன் காதலில் திளைத்து வந்த நிலையில் சைடில், அமன்டா பாய்ட் என்ற பெண்ணுடனும் ரகசிய உறவை பேணி வந்தாராம் டைகர். இதனால்தான் லின்ட்சே கோபித்துக் கொண்டு போய் விட்டாராம்.

யார் இந்த அமன்டா

யார் இந்த அமன்டா

27 வயதாகும் அமன்டா, ஜேசன் டப்னர் என்ற கோல்ப் வீரரின் முன்னாள் மனைவி ஆவார். இப்போது சிங்கிளாக உள்ள அமன்டா, டைகருடன் தற்போது தீவிரக் காதலில் திளைத்துள்ளாராம்.

அப்படில்லாம் இல்லையே

அப்படில்லாம் இல்லையே

ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று உட்ஸின் மேலாளர் மறுத்துள்ளார். அதெல்லாம் இல்லை. அவர்கள் காதலிக்கவில்லை என்று கூறியுள்ளார் மேலாளர் மார்க்.

உண்மை என்னவோ!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+