துபாயில் இன்று 'நேரம் + நிர்வாகம் = வெற்றி' நூல் அறிமுக விழா

Subscribe to Oneindia Tamil

துபாய்: தமிழ்த்தேர் நண்பர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு துபாய் கராமாவில் உள்ள சிவ ஸ்டார் பவனில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய நேரம் + நிர்வாகம் = வெற்றி நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளது. மேலும் தமிழ்த்தேரின் கவிதையும் கற்பனையும் சிறப்பிதழ் வெளியிடப்படுகிறது.

Time + Management = Success book release in Dubai today

கவிஞர் அதிரை கலாம் தலைமையில் கவியரங்கம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் அண்மையில் மறைந்த இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தருக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

மேலும் பிரபல கல்வியாளர், தொழில் அதிபர் அமரர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு அதிரை கலாம் கவிதாஞ்சலி செலுத்துகிறார். திருமதி ஸ்வேதா கோபால் வரவேற்புரை நிகழ்த்த, கவிஞர் ஏ. பாலசுப்பிரமணியபாண்டியன் வாழ்த்துரை அளிக்கிறார். திருமதி ரமா மலர்வண்ணன் மதிப்புரை வழங்குகிறார். திண்டுக்கல் ஜமால் தொகுப்புரை வழங்குகிறார்.

Time + Management = Success book release in Dubai today

பாரதி காவலர் கே. ராமமூர்த்தி, திரு. பாலாஜி பார்த்தசாரதி, பேராசிரியர் மன்சூர், கவிஞர், எழுத்தாளர், நடிகர் தமிழ்த்தேனி ஆகியோர் சிறப்பிதழ் மற்றும் நூல் வெளியீடு பற்றி சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

கவிஞர் காவிரிமைந்தன் ஏற்புரை வழங்கிய பிறகு கவிஞர் தஞ்சாவூரானின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+