ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்க காத்திருக்க முடியாது: அமெரிக்கா அமைச்சர் ஜான் கெர்ரி
நியூயார்க்: இலங்கையில் ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்கும் என்பதற்காக காத்திருக்க முடியாது என்று அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியுள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. சீனா, பாகிஸ்தான் உட்பட 12 நாடுகள் அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்த்தன.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியதாவது:
இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், இலங்கையில் அமைதியை நிலைநாட்டவும் இதுவே நல்ல தருணம். இலங்கை அரசு, அந்நாட்டு மக்களுக்கு நீதி வழங்கும் என்று நினைத்து நீதி கிடைப்பதற்காக காத்திருக்க முடியாது.
அந்நாட்டில் வாழும் மக்கள், அவர்களது அடிப்படை உரிமையான ஜனநாயகத்தையே கேட்கிறார்கள். அதனை அவர்களுக்குப் பெற்றுத் தர வேண்டியது உலக நாடுகளின் கடமை.
இதற்காகத்தான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாடுபட்டு வருகின்றன. இலங்கையில் அமைதியை ஏற்படுத்த இதுவே நல்ல வாய்ப்பு என ராஜபக்சேவுக்கு தீர்மானம் அறிவுரை வழங்கியுள்ளது.
இவ்வாறு ஜான் கெர்ரி கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications