போரின் கோரப்பிடியில் மத்திய கிழக்கு! ஈரான்-இஸ்ரேல் மோதலில் இதுவரை நடந்தது என்ன?
தெஹ்ரான்: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பனிப்போர் நீடித்து வந்த நிலையில், தற்போது நேரடியாகவே இருவரும் போர் களத்தில் குதித்திருக்கிறார்கள். இதனால் மத்திய கிழக்கு பெரும் பதற்றத்தை சந்தித்திருக்கிறது. கடந்த 2010 தொடங்கி 2024 வரை இரு நாடுகளுக்கு இடையில் நடந்த மோதல்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பு விவரிக்கிறது.
எல்லாவற்றிற்கும் தொடக்கமாக 1979தான் இருந்தது. அப்போதைய ஈரான் ஆட்சியாளரான முகமது ரேசா ஷா, இஸ்ரேல் நம்முடைய நட்பு நாடு என்று அறிவித்தார். இது இஸ்லாமிய மக்களிடையேயும், புரட்சிகர குழுக்களுக்கிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து நடந்த புரட்சியில் ஷா ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.'

பின்னர் 1982ல் இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்தது. இதற்கு பதிலடி கொடுக்கவே, ஹிஸ்புல்லா அமைப்பு உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியது ஈரான்தான். இவர்கள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலால், லெபானானிலிருந்து இஸ்ரேல் பதறியடித்து ஓடியது. அப்போது முதல் இப்போது வரை, லெபனானை ஹிஸ்புல்லாதான் அதிகாரம் செலுத்தி வருகிறது.
இது இஸ்ரேலுக்கு பெருத்த அவமானமாக ஆகிவிட்டது. எனவே, ஈரானும்-இஸ்ரேலும் பனிப்போரில் ஈடுபட தொடங்கின. இந்த மோதல் கடந்த 2010ம் ஆண்டு உச்சத்தை எட்டியது.
2010ல் இஸ்ரேல் தனது முதல் சைபர் தாக்குதலை ஈரான் மீது நேரடியாக நடத்தியது. ஈரானின் நடான்ஸ் அணுசக்தி தளத்தில் உள்ள யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்காக 'ஸ்டக்ஸ்நெட்' எனப்படும் வைரஸ் பயன்படுத்தப்பட்டது. இதனை அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து உருவாக்கின என்று ஈரான் குற்றம்சாட்டியது.
2012ல் ஈரானிய அணு விஞ்ஞானி மொஸ்டாபா அஹ்மதி-ரோஷன் தெஹ்ரானில் வைத்து கொல்லப்பட்டார். பைக்கில் வந்த மர்ம நபர்கள் சிலர், அவரது காருக்குள் வெடிகுண்டை வீசியிருக்கின்றனர். இதில் ரோஷன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த தாக்குதலுக்கும் இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரான் குற்றம்சாட்டியது.
2018ல் அணு சக்தி குறித்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இஸ்ரேல் வெளிப்படையாக கைகோர்த்தது. ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும் என்று நெதன்யாகு அப்போதிலிருந்து வலியுறுத்தி வருகிறார். அதே ஆண்டில் மே மாதம், சிரியாவில் இருந்த ஈரானின் ராணுவ கட்டமைப்பை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
2020ல் இந்த தாக்குதல் மூலம், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தன்னை இணைத்துக்கொண்டது. அதாவது பாக்தாத்தில் வைத்து ஈரானின் புரட்சிகரக் காவலர்களின் வெளிநாட்டுப் பிரிவின் தளபதியான ஜெனரல் காசிம் சுலைமானியை, ட்ரோன் தாக்குதல் மூலம் அமெரிக்கா கொலை செய்தது. இதனை இஸ்ரேல் பெரும் அளவில் ரசித்து வரவேற்றது.
2021ல் அணு ஆயுதத் திறனை வளர்ப்பதற்காக ஈரான் ரகசிய திட்டத்தை செயல்படுத்தியது. திட்டத்தின் மூளையாக மொஹ்சென் ஃபக்ரிசாதே இருந்தார். இதே ஆண்டில் இவரை குறிவைத்து இஸ்ரேல் கொலை செய்தது.
2022ல் ஈரானின் அணு ஆயுதங்களுக்கு எதிரான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பிரதமரும், அமெரிக்க அதிபரும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் உறவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரமாக்கியது.
2024ல் டமாகஸில் உள்ள ஈரானிய தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித்தாக்குதலை நடத்தியது. இதில் 2 முக்கிய தளபதிகள் உட்பட 7 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும், இதனை அந்நாடு மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு! பேசிக்கொண்டிருக்கும்போதே.. சாரை சாரையாக வெளியேறிய மாணவர்கள்! -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
பயிர் கடன் ரூ.75000 தள்ளுபடி விடுங்க! இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. மொத்த விவசாய துறையும் ஹேப்பி! -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்!












Click it and Unblock the Notifications