”திஸ் ஈஸ் தி சீசன்”- ஜிங்கிள் பெல்ஸ் கட்டி கிறிஸ்துமஸை கொண்டாடும் கூகுள் 3டி டூடுள்!

Subscribe to Oneindia Tamil

சிட்னி: மீட்பரான ஏசு கிறிஸ்துவின் பிறந்தநாளான இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அழகான 3டி கூகுள் டூடுள் வெளியிட்டு மகிழ்வித்து வருகின்றது கூகுள்.

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதனையடுத்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை மேலும் சிறப்பிக்கும் வகையில் கூகுள் 3டி ஸ்பெஷல் டூடுளை உருவாக்கியுள்ளது.

சீசனை வரவேற்கும் கூகுள்:

சீசனை வரவேற்கும் கூகுள்:

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் தொடங்கிய கிறிஸ்துமஸ் தின விடுமுறையை வரவேற்கும் விதமாக கூகுள் Tis The Season! என்ற தலைப்பில் ஒரு டூடுளை நேற்றும், நேற்று முன் தினமும் வெளியிட்டது.

ஆல்பம் பாடல்:

ஆல்பம் பாடல்:

அமெரிக்க ஆஸ்திரேலிய பாடகர்கள் இணைந்து பாடி 2000 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் காலத்தின் போது ரிலீஸ் செய்யப்பட்ட ஆல்பமே Tis The Season!.

பிரிண்ட் அவுட் எடுக்கலாம்:

பிரிண்ட் அவுட் எடுக்கலாம்:

இந்நிலையில், இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, ஸ்பெஷல் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்த டூடுளை 3டி வடிவத்தில் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.

கோலாகலக் கொண்டாட்டம்:

கோலாகலக் கொண்டாட்டம்:

பின்னர் அவற்றை ஒட்டி மடித்து குடில்களும், பறவைகளும், பொம்மைகளுமாக மாற்றிக் கொள்ளும் வகையில் வடிவமைத்திருந்தது கூகுள். சாண்டா டிராக்கர் வெளியிட்டு குட்டீஸ்களை மகிழ்வித்த கூகுள், இன்று தன்னுடைய அப்ளிகேஷன் வடிவத்தையும் கிப்ட் பெட்டி போல மாற்றி வடிவமைத்து கிறிஸ்துவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+