அமெரிக்காவுக்கு பதிலடி.. உடனே 25% வரி விதித்த கனடா.. வார்னிங் கொடுத்த ஜஸ்டின் ட்ரூடோ!
ஒட்டாவா: அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கனடா மற்றும் மெக்சிகோ பொருட்களுக்கு 25 சதவிகித இறக்குமதி வரி விதித்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடாவும் 25 சதவிகித வரி விதித்துள்ளது. அமெரிக்கா விதித்துள்ள வரி, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகள் மாறி மாறி வரி விதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அதிபராக கடந்த மாதம் குடியரசுக்கட்சியின் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவின் நலனுக்கே முன்னுரிமை அளிப்பேன் எனப் பேசி வரும் டிரம்ப், முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் மேற்கொண்ட பல நடவடிக்கைகளை கைவிட்டு வருகிறார்.

இறக்குமதி வரி விதித்த அமெரிக்கா
அதேபோல, பிரிக்ஸ் நாடுகளையும் கடுமையாக டிரம்ப் எச்சரித்து வருகிறது. டாலரை தவிர்த்து தனியாக கரன்சியில் வர்த்தகம் செய்தால் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்து வருகிறார். அதேபோல, சீனா மீதும் வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார். இத்தகைய சூழலில் தான், கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகித வரியை டிரம்ப் விதித்து உத்தரவிட்டார்.
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்து இருப்பதாக டிரம்ப் அறிவித்தார். டிரம்பின் இந்த வரி விதிப்பு நடவடிக்கையால் கடும் கோபம் அடைந்த கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் தக்க பதிலடி கொடுப்போம் என்று உடனடியாக எதிர்வினையாற்றின.
கனடாவும் 25 சதவிகிதம் வரிவிதிப்பு
இந்த நிலையில், அமெரிக்கா இறக்குதி வரி விதித்த சில மணி நேரங்களில் கனடாவும் 25 சதவிகித வரியை விதித்துள்ளது. இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருப்பதாவது:- சில ஆண்டுகளுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் வரி விதிப்பு உள்ளது. இந்த வரி விதிப்பு அமெரிக்க மக்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
30 பில்லியன் கனடா டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு உடனடியாக வரி விதிக்கப்படும். இதைத் தொடர்ந்து 21 நாட்களில் C$125 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்கள் மீது மேலும் வரிகள் விதிக்கப்படும். அடுத்த சில வாரங்கள் அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு கடினமானதாக இருக்கப் போகிறது" என்றார். இதற்கிடையே, மெக்சிகோவும் பதிலடி நடவடிக்கையாக அமெரிக்காவுக்கு எதிராக வரியை விதித்துள்ளது.
பொருளாதாரா மோதல்?
வரி இல்லாத சில பொருட்களுக்கும் வரி விதிப்பது பற்றி பரிசீலித்து வருவதாக கூறியுள்ள ஜஸ்டின் ட்ரூடோ, முக்கியமான சில கனிமங்கள், எரிசக்தி பொருட்கள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும் என தெரிவித்துள்ளார். டொனால்டு டிரம்ப் தனது உத்தரவில், வரி விதிப்புக்கு எதிராக பதிலடி நடவடிக்கை எடுத்தால் கூடுதாலக வரி விதிக்கப்படும் என்ற நடைமுறையை உருவாக்கியுள்ளார்.
இதனால், தற்போது கனடா, மெக்சிகோ பதிலடி நடவடிக்கை எடுத்து இருப்பது, பொருளாதார மோதலுக்கு வழி ஏற்படுத்துவது போல அமைந்துள்ளது. கனடாவும், மெக்சிகோவும் அமெரிக்காவிடம் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி நாடுகளில் ஒன்றாக உள்ளது. இதனால், தற்போதைய இந்த வரி மோதலால் பணவீக்கம் கடுமையாக ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications