மைக்கேல் ஜாக்சன் இல்லாத 6 ஆண்டுகள்

Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: பாப் உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய மைக்கேல் ஜாக்சன் இறந்து இன்றோடு 6 வருடங்கள் முடிவடைந்து விட்டது. 2009 ம் ஆண்டு ஜூன் மாதம் 25 ம் தேதி அன்று இறந்து போன மைக்கேல் ஜாக்சனின் 6 வது நினைவு தினம் இன்று.

பாடகர், எழுத்தாளர், நடிகர் மற்றும் தொழிலதிபர் என்று பன்முகத் திறமைகள் கொண்ட மைக்கேல் ஜாக்சன், போதைப் பொருட்கள் மீது கொண்ட அளவுக்கு அதிகமான காதலால் அதற்கு அடிமையாகி 50வது வயதில் தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

மைக்கேல் ஜாக்சனின் மரணம் உலகம் முழுவதும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் கண்ணிலும் நீரை வரவழைத்தது, அவரது 6 வது நினைவு தினமான இன்று #6YearsWithoutMichaelJackson என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி அதனை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி உள்ளனர் அவரது ரசிகர்கள்.

Today Michael Jackson 6th Memorial Day

நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே செல்லும் அந்த ஹெஷ்டேக் ட்வீட்களில் இருந்து சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

நைல் & ஜஸ்டின் என்பவர் லெஜென்டுகள் ஒருபோதும் இறப்பதில்லை, அவரது பரம்பரையினர் நன்றாக வாழ வேண்டும் என்று கூறியுள்ளார்.

வெல் தாமன் என்பவர் நீங்கள் கடந்து போய்விட்டீர்கள் ஆனால் ஒரு தேவதை போன்ற உங்களை நான் என்றும் மறக்க மாட்டேன் என்று உருகியிருக்கிறார்.

ஸ்வீட் செடுசிங்க்டி என்பவர் ( என்ன பெயரோ)நீங்கள் இறந்து போனது ஒரு கனவு போன்று உள்ளது, ஆனால் உங்களை நாங்கள் என்றும் மறக்காமல் அன்பு செலுத்துவோம். எளிதாக ஓய்வெடு ராஜா என்று கூறியுள்ளார்.

ப்ளூகேங்க்ஸ்டா என்பவர் நீங்கள் இறந்து போனது நேற்று நடந்தது போன்று உள்ளது. இன்று எங்கள் அன்பை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன் ஏஞ்செல் என்று குறிப்பிட்டுள்ளார்.

வனீசா என்பவர் நீங்கள என்னை அழவைத்து விட்டீர்கள், ஆனால் உங்களுக்கு தெரியுமா" நான் உங்களுக்காக காத்திருக்கிறேன் என்று" கேள்வி கேட்டுள்ளார்.

ஜுலஸ் என்பவர் எனது ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் நான் உங்களை மிஸ் பண்ணுகிறேன் என்று பீல் பண்ணியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+