ஒரு மக் பீரை ஒரே மடக்கில் 7 வினாடிகளில் குடித்த ஆஸி. பிரதமர்
சிட்னி: ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் ஒரே மூச்சில் ஒரு மக் பீரை வெறும் 7 வினாடிகளில் குடித்த வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் கடந்த சனிக்கிழமை இரவு கிழக்கு சிட்னியில் உள்ள பப் ஒன்றுக்கு சென்றுள்ளார். அவரை பார்த்ததும் அங்கிருந்த சில கால்பந்து விளையாட்டு வீரர்கள் உற்சாகம் அடைந்தனர். அப்பாட் ஒரு மக் நிறைய பீர் வாங்கினார். அந்த பீரை ஒரே மூச்சில் குடிக்குமாறு வீரர்கள் அவரை ஊக்குவித்தனர்.
அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க அப்பாட் ஒரு மக் பீரை வெறும் 7 வினாடிக்குள் குடித்து முடித்தார். இதை பார்த்த மக்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.
ஒரு நாட்டின் பிரதமர் இப்படியா நடந்து கொள்வது என்று சிலர் விமர்சித்தாலும், பலர் அவரை பாராட்டியுள்ளனர். ஒரு ஆஸ்திரேலிய பிரதமர் இவ்வளவு வேகமாக பீர் குடித்தது இது ஒன்றும் முதல் முறை அல்ல.
முன்னதாக முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் பாப் ஹாக் கடந்த 2012ம் ஆண்டு தனது 82வது வயதில் கிரிக்கெட் போட்டியின்போது 1.7 லிட்டர் பீரை 11 வினாடிகளில் குடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications