மாற்றான் மனைவியிடம் இப்படியா நடப்பது?: யு.எஸ். துணை அதிபரை விளாசும் மக்கள்
வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் பாதுகாப்புத் துறை செயலாளரின் மனைவியின் தோள் மீது கைகளை வைத்து அவருக்கு மிகவும் அருகில் சென்றது குறித்து ட்விட்டரில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளராக ஆஷ் கார்டர் பதவியேற்றுக் கொண்டார். அந்த விழாவில் அவருக்கு துணை அதிபர் ஜோ பிடன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேடையில் பிடன் கார்டரின் மனைவிக்கு பின்புறமாக நின்று அவரின் தோள்கள் மீது கைகளை வைத்து காதுக்கு அருகில் வந்து ஏதோ தெரிவித்தார். மாற்றான் மனைவிக்கு இத்தனை அருகிலா ஒரு துணை அதிபர் செல்வது என்று பலரும் அவரை ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இது குறித்து சில ட்வீட்கள் இதோ,
|
ஜோ
எப்பொழுதும் எல்லையைத் தாண்டும் அமெரிக்காவின் முகம்சுளிக்க வைக்கும் அங்கிள் என்று அலெக்ஸ் மெதினா என்பவர் ட்வீட் செய்துள்ளார்.
|
துணை அதிபர்
அமெரிக்காவின் சிறந்த துணை அதிபர் ஜோ பிடன் தான் என்று எல்டர்லி காம்பினோ என்பவர் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
|
வேலை
உலகிலேயே மிகவும் சந்தோஷமான வேலைகளில் ஒன்று அமெரிக்காவின் துணை அதிபர் பதவி என கார்லோஸ் தெரிவித்துள்ளார்.
|
முடி
நான் தான் சூப்பர் க்ரீப்பி ஜோ பிடன். எனக்கு அடுத்தவர்கள் முடியின் வாசனை பிடிக்கும் என்று பென் என்பவர் ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications