கொரோனாவுக்கு 1000த்துக்கும் அதிகமான பேரை பலி கொடுத்த டாப் நாடுகள்.. அமெரிக்காவில் ரொம்ப அதிகம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: உலக அளவில், கொரோனாவால் அதிகம் பேரை பலி கொடுத்த நாடு எது என்பது குறித்த பட்டியலை, வேல்ட்மீட்டர் இணையதளம் வெளியிட்டுள்ளது.
Recommended Video
பிணங்களை புதைக்க பார்க்குகளை கல்லறைகளாக மாற்ற அமெரிக்கா முடிவு?
அதன்படி உலகிலேயே, கொரோனாவுக்கு அதிகம் பேரை பலி கொடுத்த நாடு, அமெரிக்கா. உலக வல்லரசு என அழைக்கப்படும் அமெரிக்காவால்தான் இந்த பிரச்சினையை கையாள முடியவில்லை.

அமெரிக்காவில் 22,071 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலி 19,899, ஸ்பெயினில் 17,209, பிரான்சில் 14,393, பிரதமரையே கொரோனா தாக்கிய பிரிட்டனில் 10,612, ஈரானில் 4474, கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில், 3,341, ஜெர்மனியில் 3,022 பேர் பலியாகியுள்ளனர்.

ஐரோப்பிய நாடான நெதர்லாந்து 2,737 பேர், பிரேசில் 1,223, துருக்கி 1,198, சுவிட்சர்லாந்து 1,106 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். ஸ்வீடனிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு 899 பேர் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications