ட்விஸ்ட்.. சீக்ரெட்டாக ரஷ்யாவுக்கு விசிட் அடித்த டாப் இஸ்ரேல் தலைவர்.. நிலைமை மாறுதே! என்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேலைச் சுற்றிலும் இப்போது மோதல்கள் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் திடீர் திருப்பமாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு நெருக்கமான தலைவர் ஒருவர் சீக்ரெட்டாக ரஷ்யாவுக்கு விசிட் அடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழலே நிலவி வருகிறது. ஒரு பக்கம் இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்தாண்டு அக். மாதம் தொடங்கிய மோதல், ஓராண்டிற்கு மேல் தொடர்கிறது.

israel iran russia

தாக்குதல்: மறுபுறம் லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படை உடனும் இஸ்ரேலுக்கு மோதல் இருக்கிறது. இரு பக்கமும் இஸ்ரேல் ராணுவம் ஓயாமல் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதல்களில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா, ஹமாஸ் தலைவர் சின்வார் என இருவருமே கொல்லப்பட்டனர். இதனால் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது.

இந்தச் சூழலில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் நாட்டின் டாப் தலைவர் ஒருவர் ரஷ்யா நாட்டிற்குச் சென்று திரும்பியுள்ளார். லெபனான் நாட்டில் போர் நிறுத்தம் தொடர்பாக ஆலோசிக்க அவர் ரஷ்யா சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

சீக்ரெட் பயணம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராக அறியப்படுபவர் ரான் டெர்மர். இவர் இஸ்ரேல் நாட்டின் ஸ்ட்ராட்டஜிக் திட்ட துறை அமைச்சராக இருக்கிறார். இவர் தான் கடந்த வாரம் சீக்ரெட்டாக ரஷ்யாவுக்குச் சென்றதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.

israel iran russia

லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா படை உடனான தாக்குதல்கள் தொடரும் நிலையில், அங்குப் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவே ரான் டெர்மர் ரஷ்யா சென்றதாகத் தெரிகிறது. சிரியா மற்றும் லெபனான் நாடுகளுடன் ரஷ்யாவுக்கு ஒரு நல்லுறவு இருக்கிறது.

என்ன காரணம்: இதனால் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் ரஷ்யா பெரியளவில் உதவ வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாகவே ரான் டெர்மர் ரஷ்யாவுக்குச் சென்று இருக்கிறார். அதேநேரம் இந்த பயணம் தொடர்பாக அதிகாரபூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் இல்லை. இது குறித்து உள்ளூர் செய்தியாளர்கள் ரான் டெர்மர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட போதிலும், அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த அக். 24ம் தேதி தான் ரஷ்யக் குழு ஒன்று இஸ்ரேல் நாட்டிற்குச் சென்று இருந்தது. முதலில் காசாவில் உள்ள இஸ்ரேல் பணைய கைதிகளை விடுவிப்பது தொடர்பான விவகாரத்தில் அவர்கள் வந்து இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், அதை நெதன்யாகு அலுவலகம் மறுத்திருந்தது. இப்போது அமைச்சர் ரான் ரஷ்யா சென்றுள்ளதை வைத்துப் பார்க்கும் போது, ரஷ்ய குழுவும் லெபனான் விவகாரம் குறித்து விவாதிக்கவே இஸ்ரேல் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஈரான்: ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவை இஸ்ரேல் தாக்கி வரும் நிலையில், ஈரான் உடனும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.. ஒரு வேலை இஸ்ரேல் - ஈரான் மோதிக் கொண்டால் அது சர்வதேச அளவில் நிச்சயம் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே உலக நாடுகள் அங்கு நிலவும் சூழலை உற்றுக் கவனித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+