Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மேலாடை"யை கழட்டி.. அத்தனை பேர் சுற்றிலும் நிற்க.. மைதானத்தில் இளம்பெண் செய்த காரியம்.. ஹய்யய்யோ

மைதானத்தில் மேலாடையை கழட்டி சுழற்றிய ரசிகை மீது நடவடிக்கை பாயும் என்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

தோஹா: ஒரு ரசிகையின் வீடியோ இணையத்தில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.. இதையடுத்து இவர் எந்நேரேமும் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. என்ன நடந்தது?

உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்த கால்பந்து போட்டி நடந்து முடிந்தது.. கத்தாரில் சர்வதேச கால்பந்து போட்டி நடந்து முடிந்தநிலையில், அதை பற்றின பேச்சும் இன்னும் அடங்கவில்லை.

கடந்த 18ம் தேதிதான் கடைசி நாள் போட்டி.. விறுவிறுப்பான ஆட்டம் துவங்கியது.. இறுதி போட்டி என்பதால், மைதானத்தில் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.. இறுதியில், அர்ஜென்ட்டினா அபார வெற்றி பெற்றுவிட்டது.

 குஷி குஷி

குஷி குஷி

அதாவது, பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வீழ்த்தியது... இதை சாதாரண வெற்றியாக எடுத்து கொள்ள முடியாது.. காரணம், 36 வருடங்களுக்கு பிறகு, அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.. இந்த வெற்றையை லைவ்வாக பார்த்து கொண்டிருந்த பலரும் மகிழ்ச்சியில் லுசைல் மைதானத்திலேயே துள்ளி குதித்தனர்.. அப்படித்தான் ஒரு பெண்ணும் துள்ளி குதித்துள்ளார்.. அந்த குஷி அதிகமாகிவிடவும், தன்னுடைய மேலாடையை கழட்டிவிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

 ஓவர் ஓவர்

ஓவர் ஓவர்

இது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாக மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. அர்ஜென்ட்டினாவின் வெற்றி பேசப்படும் அதே சமயம், இந்த பெண்ணின் வீடியோ பற்றியும் பேசப்பட்டு வருகிறது.. கால்பந்து போட்டிகளின்போது ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் உள்ள ரசிகைகள் பெரும்பாலும் எமோஷனல் ஆகிவிடுவது இயல்புதான் என்றாலும், இந்த பெண் சற்று ஓவராகவே போய்விட்டார்.. பொதுவெளியில், மேலாடையை கழற்றி சுழற்ற ஆரம்பித்துவிட்டார்.. இது தொடர்பாக அந்த ரசிகை மீது கத்தார் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது..

 முழங்கால் டிரஸ்

முழங்கால் டிரஸ்

சர்வதேச கால்பந்து போட்டியை நடத்துவதற்காக கத்தாரில் நிறைய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன.. குறிப்பாக, மைதானத்திற்குள் பீர் பாட்டில் கொண்டு செல்லக்கூடாது, ஆடை விஷயத்தில் சரியாக இருக்க வேண்டும என்றெல்லாம் புதிய விதிகளை கத்தார் விதித்துள்ளது... அதுமட்டுமல்ல, கால்பந்து போட்டியை காண வரும் ரசிகர்கள் , வெளிநாட்டு பார்வையாளர்கள் நாட்டின் கலாச்சாரம் மற்றும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் அதனால், தோளில் இருந்து முழங்கால் வரை டிரஸ் அணிந்திருக்க வேண்டும் என்றும் விதிமுறைகள் விதிக்கப்பட்டன.

 ஒரே செகண்ட்

ஒரே செகண்ட்

இவ்வளவு கண்டிஷன்களையும் அந்த பெண் ஒரே செகண்ட்டில் தூக்கி எறிந்துவிட்டார்.. மேலாடையை கழற்றி அதை காற்றில் சுழற்றி சுழற்றி கொண்டாட்டத்தில் இறங்கினார்.. ஆனால், அங்கிருந்தவர்களோ, இந்த பெண்ணை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.. அது வீடியோவாகவும் வேகமாக பரவ தொடங்கியது.. இவர் வெளிநாட்டு ரசிகை என்றும் கூறப்படுகிறது.. பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதால், இந்த வெளிநாட்டு பெண்ணை கைதுசெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.. இருந்தாலும் ஒரு சில அனுதாபங்கள் இவர்மீது எழுந்து வருகின்றன.

 ஆர்வ கோளாறு

ஆர்வ கோளாறு

"ஏதோ ஆர்வ கோளாறில், வெற்றிக்களிப்பில் இப்படி நடந்து கொண்டுவிட்டார்.. அதனால் அவரை மன்னித்துவிட்டுவிடலாம் என்று ஒரு தரப்பினர் சப்போர்ட் செய்து வருகிறார்கள்.இதுவரை அந்த பெண் மீது கத்தார் அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றாலும், இப்படியே அவரை மன்னித்து விட்டுவிடுமா என்று தெரியவில்லை.. இப்படித்தான் ஒருமுறை, குரோஷியா நாட்டை சேர்ந்த மாடல் ஒருவர் மைதானத்தில் இறுதி போட்டியை பார்த்து கொண்டிருந்தார்.. அவரது நாட்டு அணி வெற்றி பெற்றால் மைதானத்தில் இருந்து நிர்வாணமாக செல்வதாக சர்ச்சை கருத்தை வெளியிட்டிருந்தார்... ஆனால், அவர் நாடு தோல்வியை தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேஷூவல் டிரஸ்

கேஷூவல் டிரஸ்

சில தினங்களுக்கு முன்பு, குரோஷியா அணி விளையாடிய போட்டிகளில், அந்த நாட்டின் ஜெர்சியில் ஆடை தைத்து அணிந்து வந்த இவானா நோல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.. உலக கோப்பை தொடரின் "ஹாட்டஸ்ட்" ரசிகை என்று பெயரை பெற்றவர் குரோஷியாவின் இவானா நோல்... 'மிஸ்' குரோஷியா பட்டம் வென்றவர் இவர்.. கடந்த 2018 தொடரில் கவர்ச்சியில் கலக்கியவரும்கூட.. சமீபகாலமாக, கத்தாரில் கடுமையான உடை கட்டுப்பாடுகள் காரணமாக, தேசிய கொடியின் நிறத்தில் தலையில் இருந்து கால்கள் கூட தெரியாத அளவுக்கு இவர் ஆடை அணிந்து வந்தார். பிறகு, மறுபடியும் கேஷூவல் ஆகிவிட்டார். வழக்கம் போல கவர்ச்சி உடைகளில் கலக்கினார்.. அன்றையதினம், இவானா நோலை சந்திக்க மைதானத்திலும், மைதானத்திற்கு வெளியேவும் கட்டுக்கடங்காத கூட்டம் நின்றிருந்து சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+