விபத்தில் கணவனும், மகளும் பலி- வீட்டில் மனைவி பலி: ஓமனில் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்!
மஸ்கட்: ஓமனில் தமிழகத்தைச் சேர்ந்தவரின் குடும்பமே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஓமன் நாட்டில் உள்ள சோஹர் இரும்பு ஆலையில் பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் அங்கேயே வாழ்ந்து வருகிறார்.
அங்குள்ள இந்தியப் பள்ளியில் நான்காம் வகுப்பில் படிக்கும் தனது மகளுடன் நேற்று காரில் சென்றுக் கொண்டிருந்தபோது டேங்கர் லாரியின் மீது அந்த கார் மோதிய விபத்தில் தந்தை-மகள் இருவருமே பரிதாபமாக பலியாகினர்.
மனைவிக்குத் தகவல்:
இதுபற்றிய தகவலறிந்த அவரது நண்பர்கள் மருத்துவமனையின் பிணவறைக்குச் சென்று, இறந்தது அந்த நபர்தான் என்பதை உறுதி செய்துக் கொண்ட பிறகு, அவரது மனைவிக்கு தகவல் சொல்வதற்காக போன் செய்தனர்.
போனை எடுக்காத மனைவி:
ஓமனில் உள்ள எல் அண்ட் டி கம்பனியில் பணியாற்றும் அந்தப் பெண், வெகுநேரம் வரை செல்போனை எடுத்துப் பேசவில்லை.
மனைவியும் பலி:
தொடர்ந்து போன் செய்துப் பார்த்து விரக்தியான அவரது நண்பர்கள், இறந்தவர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, வீட்டினுள் அந்தப் பெண் பிணமாக கிடந்ததாக ஓமன் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விவரங்கள் தெரியவில்லை:
அந்த குடும்பம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்ற தகவலை மட்டும் வெளியிட்டுள்ள ஓமன் ஊடகங்கள் அவர்கள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், பெயர், விபரம் ஆகியவற்றை வெளியிடவில்லை. இச்சம்பவம் ஓமனிலும், தமிழகத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications