Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மோதி விபத்து: 3 பேர் பலி; 100 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில், ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Train crashes into New Jersey Transit Hoboken station

அந்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை காலை 8.40 மணிக்கு ஹோபோகன் ரயில் நிலையத்தில் வேகமாக வந்த பயணிகள் கட்டுப்பாட்டை இழந்து ரயில் நிலையம் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயில் நிலையம் பெரும் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த ரயில் விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்துக்குள்ளான ரயிலில் பலர் சிக்கியிருப்பதாக கூறப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Train crashes into New Jersey Transit Hoboken station

தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் ரயிலில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்த சேத விவரங்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+