'பிங்க்' பேபன், 'கிரீன்' மாடிசன், ஊதா பைகே... நெயில் பாலீசால் குழந்தைகளை அடையாளம் காணும் அம்மா!
லண்டன்: ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பெண் குழந்தைகளை அவர்களது காலில் உள்ள நெயில் பாலீஷ் மூலம் அடையாளம் காண்கிறாராம் இங்கிலாந்து தாய் ஒருவர்.
இங்கிலாந்தில் உள்ள சவுத் வேல்ஸ் பண்டிபூல் பகுதியை சேர்ந்த தம்பதிகள் கரண் - இயன் கில்பர்ட் . இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன.
ஆபரேஷன் மூலம் பிறந்த அக்குழந்தைகள் அசப்பில் ஒரே மாதிரி இருந்தன. இதனால் பெற்றோருக்கு குழப்பம் உண்டானது. அசப்பில் ஒன்றுபோல் உள்ள குழந்தைகளை கண்டறிய வித்தியாசமான அடையாளம் ஒன்றை உண்டாக்கினர் பெற்றோர்.

3 பெண் குழந்தைகள்...
மூன்று குழந்தைகளுக்கும் பேபன் , மாடிசன் மற்றும் பைகே என பெயரிட்டனர் அத்தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே 4 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.
குழப்பம்...
ஆனபோதும், ஒரே மாதிரி இருந்ததால் எந்த குழந்தைக்கு பால் கொடுத்தோம், எந்த குழந்தைக்கு கொடுக்கவில்லை, எந்த குழந்தைக்கு குளிப்பாட்டி டிரஸ் மாற்றினோம் என்று குழப்பத்தில் இருந்துள்ளனர் பெற்றோர்.
வித்தியாசமான ஐடியா...
இந்தக் குழப்பத்தைக் குறைக்க தனது மனைவிக்கு வித்தியாசமான ஐடியா ஒன்றைக் கொடுத்தார் கரண். அந்த ஐடியாவின் படி, மூன்று குழந்தைகளின் கால் நகங்களிலும் மூன்று வெவ்வேறு நிறங்களில் நக பாலீஷ் போட்டு விட்டனர்.
3 வண்ணங்கள்...
அதன்படி குழந்தை பேபனுக்கு பிங்க் கலரிலும், மாடிசன் புதினா பச்சை, பைகே ஊதா கலரும் காலின் பெருவிரல் நகத்தில் வண்ணம் தீட்டி உள்ளனர்.
84 பாட்டில்கள்...
இந்த மூன்று குழந்தைகளுக்காக வாரந்தோறும் 84 பாட்டில்கள் பால் மற்றும் 120 நேப்பிஸ் என்று கூறப்படும் குழந்தைகளின் ஆடைகளை பயன்படுத்துவதாகவும் அதன் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஆபரேஷன் மூவர்....
இது குறித்து குழந்தையின் தாயார் கிரண் கூறும்போது, ‘இது எங்களுக்கு வித்தியாசமான வேடிக்கையான ஆண்டாக உள்ளது. ராணுவ நடவடிக்கை மாதிரி இதை நாங்கள் ''ஆபரேஷன் மூவர்'' என அழைக்கிறோம்.
இப்பவே ஸ்டார் தான்...
எங்களுக்கு மூன்று சிக்கல். ஆனால் இதற்கு வேறு வழி இல்லை.இவர்கள் ஒரு வயதை அடையும் முன்பே பெரிய டிவி ஸ்டாராகி விட்டனர். இவர்கள் எங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டுவரும் அழகான பெண்கள்' என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications