போப் இறுதி சடங்கில் தூங்கி வழிந்த டிரம்ப்? சோஷியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்ட போட்டோ!
ரோம்: இத்தாலியின் ரோம் நகரில் போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்றிருந்தார். ஆனால் இறுதி சடங்கில் அவர் தூங்கிவிட்டார் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
முன்வரிசையில் அவர் மெலனியா டிரம்ப்புடன் அமர்ந்திருந்தார். அவர் பங்கேற்றிருந்தது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அதில் டிரம்ப் தூங்குவதை போல கண்களை மூடிக்கொண்டு இருந்திருக்கிறார்.

இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் கடுமையான விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. தூங்குவதற்கு எதற்கு முதல் வரிசையில் இடம்? எங்காவது கடைசி வரிசையில் இடம் கொடுத்திருக்க வேண்டியதுதானே! என்றும், "அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக மாற்றுவோம் என்று கூறும் டிரம்ப், போப் இறுதி சடங்கில் தூங்குகிறார். மொபைல் எடுத்து யாருக்கோ டெக்ஸ்ட் செய்திருக்கிறார். இறுதி சடங்குக்கான டிரஸ் கோட்-ஐ பின்பற்றவில்லை. ஆக இப்படி சூப்பராக அமெரிக்காவை இவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்" என்று x தளத்தில் பலரும் விமர்சித்துள்ளனர்.
உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு போப் தலைவராக இருந்திருக்கிறார். இவருடைய இயற்பெயர் ஜோர்ஜ் மாரியோ பெர்கோலியோ. இவர் 2001ல் கார்டினலாக நியமிக்கப்பட்டார். 2005ல் பேனடிக்ட் XVI திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் குழுவில் பங்கேற்றார். 2013ல் போப்-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு "பிரான்சிஸ்" என்ற பெயர் வழங்கப்பட்டது. இவர் அமெரிக்கா கண்டத்தில் இருந்து வந்த முதல் போப் ஆவார். மட்டுமல்லாது முதல் 'ஜெஸ்யூயிட்' என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெஸ்யூயிட் என்பவர்கள் ஏறத்தாழ துறவி வாழ்க்கையை வாழ்பவர்கள். அவர்கள் அதிகாரத்திற்கு வர விரும்ப மாட்டார்கள். போப் பதவி என்பது ஒரு அதிகாரம் போல. 2013ம் ஆண்டு இந்த வரலாற்றை ஜோர்ஜ் மாரியோ பெர்கோலியோ, போப் ஆக மாறினார்.
இவரது இறுதி சடங்கில் உலகம் முழுவதும் இருந்து தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் டிரம்ப் உக்ரைன் போர் தொடர்பாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பேசியிருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஷ்ய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்தார்.
"ஏன் மக்கள் குடியிருப்புகள் மீதும், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியிலும் ரஷ்யா குண்டுகளை வீசுகிறது என்பது தெரியவில்லை. அவர் போர் நிறுத்தத்தை விரும்பவில்லையோ என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. எனவே, வங்கி கட்டுப்பாடுகள் மற்றும் இரண்டாம் தர பொருளாதார தடைகளை விதிப்பதன் மூலம் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கலாம் என்று யோசிக்கிறேன். போரில் அதிகமான மக்கள் உயிரிழந்துக்கொண்டிருக்கின்றனர்" என்று டிரம்ப் ஆதங்கப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications