மாட்டிக்கிட்ட பங்கு.. டிரம்ப்-ன் கழுத்தை நெறிக்கும் ஈரான்.. தேவையில்லாமல் இறங்கிவிட்டோம் புலம்பும் USA!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட போர் மிகப்பெரிய உத்தி ரீதியான தவறு (Strategic Mistake) என்று சர்வதேச விவகாரங்களை ஆய்வு செய்யும் புகழ்பெற்ற 'ஃபாரின் பாலிசி' (Foreign Policy) இதழ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
1970ல் அமெரிக்காவில் துவங்கிய இந்த பத்திரிக்கை உலகளாவிய விவகாரங்களை ஆய்வு செய்து தனது அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் ஈரான் மீதான போர் குறித்து முக்கியமான அறிக்கையை வெளியிட்டு டிரம்ப் நிர்வாகத்தை ஆட்டம் காண செய்துள்ளது.

ஈரான் எதிராக அமெரிக்கா தொடுத்துள்ள போரில், டிரமப் நிர்வாகம் திட்டமிட்ட இலக்குகளை அடையத் தவறிய நிலையில், இந்த மோதலின் விளைவுகளை எதிர்கொள்ள வாஷிங்டன் நிர்வாகம் தயங்கி வருவதாக அந்த இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
தோல்விகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, வெள்ளை மாளிகை இந்த மோதலால் ஏற்பட்டுள்ள அரசியல் பாதிப்புகளை (Political Fallout) சமாளிக்க முயன்று வருகிறது என்ற டிரம்ப அரசின் மீது மிகப்பெரிய விமர்சனத்தை வைத்துள்ளது.
ஒருப்பக்கம் ஈரான் போரில் அமெரிக்கா எவ்விதமான முன்னேற்றத்தையும் அடையவில்லை, இதேபோல் ஈரானுக்குள் எவ்விதான எண்ணெய், எரிவாயு தளத்தையும் கைப்பற்றவில்லை. மாறாக ஈரான் திருப்பி அடிக்க துவங்கியதில் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான விமானங்கள், ட்ரோன்கள் மட்டும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்த போரின் உக்கிரத்தால் ஏற்பட்ட இழப்புகள், நீண்ட காலத் தாக்கங்கள் மற்றும் பொருளாதாரச் செலவுகள் போன்ற முக்கியமான கேள்விகளை எதிர்கொள்வதைத் டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து தவிர்த்து வருவதாகவும் ஃபாரின் பாலிசி குற்றம் சாட்டியுள்ளது.
பிடிவாதமாக இருக்கும் ஈரான்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் இந்த மோதலுக்கு நடுவே, டிரம்ப் நிர்வாகம் பல்வேறு தூதரக வழிகள் (Diplomatic Channels) மூலம் ஒரு பொது உடன்படிக்கை கட்டமைப்பை (Public Agreement Framework) நோக்கி நகர்வதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக ஈரானுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், தங்களுடைய முக்கிய நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகளை (Core Conditions and Strategic Demands) அமெரிக்காவின் தற்போதைய அமைதி பேச்சுவார்த்தை திட்டங்கள் பூர்த்தி செய்யவில்லை என்று கூறி, வாஷிங்டனின் திட்டங்களை ஈரான் அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
ஈரானின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குதல் (Sanctions Relief), முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்களை விடுவித்தல் (Frozen Assets), அணுசக்தி நிபந்தனைகள் மற்றும் சர்வதேச வர்த்தகப் போக்குவரத்திற்கு மிக முக்கிய வான்வழி மற்றும் கடல்வழிப் பாதையான 'ஹார்முஸ் நீரிணை' (Strait of Hormuz) மீதான கட்டுப்பாடு நீக்கம் போன்ற விவகாரங்களில் இருதரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தங்களுடைய இலக்குகள் முழுமையாக உறுதி செய்யப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்படும் வரை இறுதிப் பதில் எதையும் வழங்கப் போவதில்லை என்பதில் ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் மிகவும் பிடிவாதமாக உள்ளனர்.
இஸ்ரேல் செய்யும் தந்திர வேலை
இப்படியொரு இக்கட்டான சூழ்நிலை நிலவி வரும் வேளையில், அமெரிக்காவின் ரகசிய உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கை ஒன்று கசிந்து பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அந்த ரகசிய அறிக்கையின்படி, ஈரானுடன் அமெரிக்கா நடத்தி வரும் தூதரகப் பேச்சுவார்த்தைகளைக் கைவிடுமாறு இஸ்ரேலிய உயர் அதிகாரிகள் வாஷிங்டனுக்குப் பின்னணியில் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றனர்.
பேச்சுவார்த்தைகளை விடுத்து, ஈரானின் மிக முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் (Energy Infrastructure) மற்றும் ஈரான் நாட்டு உயர் தலைவர்களை இலக்கு வைத்து மீண்டும் ஒரு ராணுவத் தாக்குதல் உத்தியைக் கையில் எடுக்குமாறு இஸ்ரேல் தரப்பு ரகசியமாக வலியுறுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications