ஈரான் உடன் ஒட்டி உறவாடும் டிரம்ப்.. வரி, வர்த்தக தடை டீலிங் போய்கிட்டு இருக்கு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் அமெரிக்கா நெருக்கமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் என்று தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, டிரம்ப் ஈரான் சமுதாயத்தையே அழித்துவிடுவேன் என மிரட்டிய பின்னர் இரு நாடுகளும் 24 மணிநேரத்திற்குள் நெருக்கமான பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக டிரம்ப் கூறியது உலக நாடுகளுக்கு வியப்பை அளித்துள்ளது.

ஈரானில் ஆட்சி மாற்றம்
டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில், ஈரான் "மிகவும் வெற்றிகரமான ஆட்சி மாற்றத்தை" சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மாற்றத்திற்கு பின்னர், அமெரிக்கா ஈரானுடன் இணைந்து பணியாற்றும் என்று அவர் தெரிவித்தார். இது இரு நாடுகளுக்கும் இடையே புதிய உறவு உருவாகும் சாத்தியத்தை சுட்டிக்காட்டியுள்ளார் டிரம்ப்.
அணு ஆயுத வளர்ச்சிக்கு முழு தடை
ஈரான் எதிர்காலத்தில் யுரேனியம் செறிவூட்டலை மேற்கொள்ளாது என்று டிரம்ப் தெளிவாகக் கூறியுள்ளார். மேலும், அணு ஆயுதம் தொடர்புடைய "ஆழமாகப் புதைக்கப்பட்ட அணு தூசு" அனைத்தையும் அமெரிக்கா ஈரானுடன் இணைந்து தோண்டி எடுத்து அகற்றும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
செயற்கைக்கோள் கண்காணிப்பு
ஈரான் அணுசக்தி நிலையம் தாக்குதல் நடைபெற்ற நாள் முதல் இப்பகுதியில் எந்தப் பொருளும் தொடப்படவில்லை என்று டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் விண்வெளிப் படை (Space Force) மூலம் மிகத் துல்லியமான செயற்கைக்கோள் கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார். இதனால் ஈரானின் அணு நடவடிக்கைகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருவதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
வரி மற்றும் வர்த்தக தடை பேச்சுவார்த்தை
டிரம்ப் மேலும் தனது பதிவில், ஈரானுடன் வரி மற்றும் பொருளாதாரத் தடைகள் தொடர்பான நிவாரணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இந்தப் பேச்சுவார்த்தையின் அமெரிக்கா முன்வைத்த 15 அம்சங்களில் பல ஏற்கனவே ஈரான் அரசால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் சில தளர்த்தப்படும் சாத்தியத்தை உருவாக்கியுள்ளது தெரிகிறது.
இந்த அறிவிப்பு உலக அரசியலில் முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. ஈரான் மீதான அணு ஆயுதத் தடை மற்றும் பொருளாதார நிவாரணம் ஆகியவை உலக நாடுகளுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த மாற்றங்கள் எந்த அளவுக்கு நடைமுறைக்கு வரும் என்பதை அடுத்த சில நாட்களில் தான் தெரியவரும்.
அமெரிக்கா ஈரானுடன் உறவை மேம்படுத்தினால், உலக அளவில் எண்ணெய் விலை மற்றும் பொருட்களின் விலை குறையும் வாய்ப்பு உள்ளது. இது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பொருளாதாரத்துக்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும்.
-
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
லீக்கான அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்.. அட இதெல்லாம் இருக்கா.. ஈரானுக்கு இனி ராஜவாழ்க்கை! -
ராஜா மாதிரி மீண்டும் தலையெடுக்கும் ஈரான்.. ஹார்மூஸ் வழியாக 3 ஈரானிய கப்பல் 'அவுட்'! -
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
பயிர் கடன் ரூ.75000 தள்ளுபடி விடுங்க! இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. மொத்த விவசாய துறையும் ஹேப்பி! -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்!












Click it and Unblock the Notifications