ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த டிரம்பின் வழக்கறிஞர் அலுவலகத்தில் சோதனை
தனது வழக்கறிஞர் அலுவலகத்தில் எஃப்பிஐ சோதனை மேற்கொண்டது, "அவமதிப்பான செயல்" என்றும் அது "நாட்டின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்" என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த "சூனிய வேட்டை" தொடர்ந்து நடைபெற்று வருகிறது என வெள்ளை மாளிகை நிருபர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.
இந்த சோதனையில், வழக்கறிஞர் மைகல் கொஹென் மற்றும் அவரின் வாடிக்கையாளர்கள் பேசிய "ரகசிய தகவல்கள்" கைப்பற்றப்பட்டன.
ஆபாச பட நடிகைக்கு பணம் வழங்கியது தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என அமெரிக்க ஊடகம் தெரிவிக்கிறது.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரித்து வரும் சிறப்பு வழக்கறிஞர் ராபர்ட் முல்லரின் "பரிந்துரையில்" இந்த சோதனை நடத்தப்பட்டது.
முல்லர் மற்றும் அவரது குழு "ஒரு தலைபட்சமானவர்கள்" என டிரம்ப் விமர்சித்துள்ளார்.
வழக்கறிஞர் கொஹென், ஆபாசப்பட நடிகைக்கு ஒரு லட்சத்து 30,000 அமெரிக்க டாலர்கள் வழங்கியதாக அவர் ஒப்புக் கொண்டதிலிருந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
அதிபர் டிரம்புடன் பாலியல் உறவு வைத்து கொண்டதாக ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஸ்டார்மி டேனியல்ஸின் குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.
பிற செய்திகள்:
- 'சிரியா ரசாயன தாக்குதலுக்கு ஆதாரம் இல்லை': ரஷ்யா
- இமாச்சல்: பள்ளிப் பேருந்து பள்ளத்தில் சரிந்ததில் 23 குழந்தைகள் உள்பட 27 பேர் பலி
- ஒரு தொலைக்காட்சித் தொடர் உருவாக்கிய துப்பாக்கி வீராங்கனை
- காவிரி: ஸ்கீம்' என்ற வார்த்தையால் தொடரும் குழப்பம்
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications