BRICS: முடிந்து போன கல்யாணத்துக்கு மேளம் அடித்த டிரம்ப்! என்ன பயந்துட்டியா குமாரு?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: "பாருங்க.. நீங்க பண்றது நல்லா இல்ல. இப்படியே போச்சுனா 10% வரியை 100% ஆக மாத்திடுவோம்" என்று பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஏன் இந்த எச்சரிக்கை? அப்படி என்ன செய்கிறது பிரிக்ஸ்? பிரிக்ஸில் என்ன நடக்கிறது? என்பதை இந்த செய்தி விவரிக்கிறது.

சமீபத்தில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாடுகளுக்குள் வணிக உறவை மேம்படுத்துவது தொடர்பாகவும், வர்த்தக உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாகவும் பேசி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

Trump BRICS US

டிரம்ப் பேசியது என்ன?

இப்படி இருக்கையில்தான் முடிந்து போன கல்யாணத்துக்கு மோளம் அடித்திருக்கிருக்கிறார் டிரம்ப். அவர் பேசியது இதுதான், "ஆறு நாடுகள் கொண்ட குழுவாக பிரிக்ஸ் உருவாக்கப்பட்டதை நான் கேள்விப்பட்டேன். அவர்கள் எப்போதாவது அர்த்தமுள்ள அமைப்பாக மாறினால், அது விரைவில் முடிவுக்கு வரும். எவரும் எங்களுடன் விளையாட அனுமதிக்க முடியாது. அமெரிக்காவில் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை உருவாக்க அனுமதிக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார்.

டிரம்ப் எதற்காக இப்படி பேசி இருக்கிறார் என்பதை விரிவாக டி-கோட் செய்வோம். முதல் விஷயம் பிரிக்ஸ் அமைப்பின் எண்ணிக்கை. டிரம்ப் சொன்னதை போல இதில் 6 நாடுகள் இல்லை, 10-11 நாடுகள் உறுப்பினராக இருக்கிறது. என்னப்பா டிரம்ப் இதெல்லாம்? தப்பு தப்பா கணக்கை சொன்ன எப்படி?

பிரிக்ஸ் கரன்சி

அடுத்த விஷயத்திற்கு வருவோம். அர்த்தமுள்ள அமைப்பாக மாறினால், அது விரைவில் முடிவுக்கு வரும் என்று கூறியிருக்கிறார். முடிவுக்கு வருமா? அல்லது முடித்து வைக்கப்படுமா? என்பது உலகம் அறிந்த விஷயம். அது சரி அர்த்தமுள்ள அமைப்பு என்றால் என்ன? அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு சவால் விடும் வகையில், அமெரிக்காவின் கரன்சியான டாலருக்கு சாவல் விடும் வகையில் பிரிக்ஸ் அமைப்பு உருவாவதைதான், அவர் இப்படி சொல்லியிருக்கிறார்.

டாலரின் ஆதிக்கம்

கடந்த காலங்களில் பிரிக்ஸ் அமைப்பு, தங்களுக்கு என தனி கரன்சியை உருவாக்க யோசித்தது. இந்தியாவுக்கு ரூபாய், அமெரிக்காவக்கு டாலர் என்பதை போல இல்லாமல், பிரிக்ஸின் 10 நாடுகளுக்கும் பொதுவாக 'பிரிக்ஸ் கரன்சி' என்கிற பெயரில் ஒரு கரன்சியை உருவாக்க முயன்றது. எதுக்கு இது? பிரிக்ஸ் நாடுகளுக்குள் வர்த்தகம் செய்யவும், கொடுக்கல் வாங்கலை எளிதாக்கவும் பிரிக்ஸ் கரன்சி பயன்படும். குறிப்பாக டாலரின் ஆதிக்கத்தை இது முடிவுக்கு கொண்டுவரும்.

இதை கேட்டு அப்போவே டிரம்ப் பதறியிருக்க வேண்டும். ஆனால் இப்போது வந்து உருட்டியிருப்பது கொஞ்சம் லேட்தான். ஏனெனில் இன்னும் பிரிக்ஸ் அமைப்புக்குள் முழு ஒற்றுமை ஏற்படாததால் பிரிக்ஸ் கரன்சி முயற்சி தள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இதெல்லாம் தெரியாமல் இப்போது வந்து டிரம்ப் வந்து மிரட்டி இருக்கிறார். இத்தனை நாள் எங்கிருந்தார்?

பிரிக்ஸ் பே

சரி இத்துடன் பிரிக்ஸ் அமைதியாகிவிட்டதா? என்று கேட்டால் இல்லை. பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கு என 'பிரிக்ஸ் பே' எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இது பண பரிவர்த்தனைக்கான அமைப்பு. கூகுள்-பே மாதிரிதான். ஆனால் கொஞ்சம் டைம் எடுக்கும். ஏற்கெனவே SWIFT எனும் பண பரிவர்த்தனை அமைப்பை மேற்கத்திய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவும் மற்ற நாடுகளும் இதை பயன்படுத்தினாலும், முழுக்க முழுக்க இது மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.

எனவே இதற்கு மாற்றாக பிரிக்ஸ் நாடுகள் சில முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இது வெற்றியும் பெற்றிருக்கிறது. இருப்பினும் முடிந்துபோன கல்யாணத்திற்கு டிரம்ப் மோளம் அடிக்க வந்திருப்பது சர்வதேச அளவில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+