Iran War: டிரம்ப்-ஐ பந்தாடும் 53 ஆண்டு பழைய சட்டம்.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் பூகம்பம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று வெள்ளிக்கிழமை (மே 1) ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் அல்லது காங்கிரஸுக்கு விளக்கம் அளித்து நீட்டிப்பு பெற வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் நிற்கிறார். இல்லையெனில் அமெரிக்க படைகள் பொட்டியை கட்ட வேண்டியது தான்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் தலைமையிலான ரிபப்ளிகன் கட்சிக்கு பெரிய ஆதரவு இருக்கும் காரணத்தால், டிரம்ப்-ன் அனைத்து திட்டத்தையும், முடிவுகளையும் தடையின்றி செயல்படுத்தும் வாய்ப்பை பெறுகிறார். ஆனால் 53 ஆண்டு பழைய சட்டம் ஈரான் விவகாரத்தில் டிரம்ப் கையை கட்டிப்போட்டு உள்ளது.

1973 போர் அதிகார தீர்மானம்
அமெரிக்காவின் 1973 போர் அதிகார தீர்மானத்தின் படி, அமெரிக்க அதிபர் ராணுவ நடவடிக்கையை 60 நாட்கள் மட்டுமே தொடர முடியும். அதன் பிறகு போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் அல்லது காங்கிரஸின் ஒப்புதலைப் பெற்று போரை நீட்டிக்க வேண்டும்.
இல்லையெனில் இறுதி வாய்ப்பாக அமெரிக்க படைகளின் பாதுகாப்புக்காக "தவிர்க்க முடியாத ராணுவத் தேவை" எனக் கூறி 30 நாட்கள் நீட்டிப்பு கோரலாம். இந்த விதியைப் பின்பற்றி டிரம்ப் நிர்வாகம் தற்போது ஈரான் போர் மீதான தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
போர் எப்படித் தொடங்கியது? பிப்ரவரி 28 தாக்குதல்கள்
ஈரான் மீதான போர் கடந்த பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய விமானத் தாக்குதல்களுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து டிரம்ப் காங்கிரஸுக்கு 48 மணி நேரத்தில் அதிகாரப்பூர்வமாக தகவல் அளித்தார்.
இதனால் 60 நாட்கள் காலக்கெடு கணக்கு மே 1 அன்று முடிவடைகிறது. ஏப்ரல் 8 முதல் அமலில் உள்ள போர்நிறுத்தம் காரணமாக போர் முடிந்துவிட்டதாக டிரம்ப் நிர்வாகம் வாதிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் நிபுணர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களின் சொல்வது படி, இந்தக் காலக்கெடு எந்தப் பெரிய மாற்றமும், சிக்கலுமின்றி கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் தாக்குதல் ஏப்ரல் 8ஆம் தேதியே நிறுத்தப்பட்டதால், தற்போது கப்பல் போக்குவரத்து பாதைகளை இரு நாட்டு ராணுவமும் முடக்கியுள்ளது. இதனால் போரை முழுமையாகவும், உடனடியாகவும் முடிவுக்குக் கொண்டுவரும் வாய்ப்பு மிகவும் குறைவு.
இதனால் டிரம்ப் நிர்வாகம் ஏப்ரல் 8ஆம் தேதியே போர் நிறுத்தப்பட்டு விட்டது என கூறலாம், அல்லது 30 நாட்கள் நீட்டிப்பு பெற்று தாக்குதலை மீண்டும் துவங்கலாம். இதே நேரத்தில் ஆச்சரியப்படும் விதமாக ஈரான் தரப்பில் வெள்ளிக்கிழமை டிரம்ப் நிர்வாகம் முக்கியமான அமைதி பேச்சுவார்த்தை திட்டத்தை அமெரிக்க தரப்புக்கு அனுப்ப பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது.
ஜனநாயகக் கட்சியினர் vs ரிபப்ளிகன்
ஈரான் போர் தொடர்பான விவகாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் அரசியல் அமைப்புச் சட்டப்படி போர் அறிவிக்கும் உரிமை காங்கிரஸுக்கே உண்டு எனக் கூறி, டிரம்ப் நிர்வாகத்தை விமர்சித்து வருகின்றனர். ஜனநாயக கட்சியினர் பல முறை தீர்மானங்கள் கொண்டு வந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற வேண்டும் அல்லது காங்கிரஸ் ஒப்புதல் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால் ரிபப்ளிகன் கட்சியினர், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி அந்தத் தீர்மானங்களை ஒருமித்தமாக நிராகரித்து வருகின்றனர்.
நேற்று வியாழக்கிழமை செனட்டில் நடைபெற்ற ஆறாவது முயற்சியிலும் ரிபப்ளிகன் கட்சியினர் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்தினர்.
-
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
பயிர் கடன் ரூ.75000 தள்ளுபடி விடுங்க! இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. மொத்த விவசாய துறையும் ஹேப்பி! -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications