For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெண்டில்மேன் – உமனாக விடைபெற்ற ட்ரம்ப் - ஹிலரி!

By Shankar
Google Oneindia Tamil News

நியூயார்க்: அதிபர் தேர்தலுக்கான விவாதத்தில் ஹிலரியும் ட்ரம்பும் கடுமையாக கருத்து மோதலில் இறங்கினாலும், இறுதியில் தோழமையுடன் விடைப் பெற்றனர்.

இந்த விவாதத்தில் இருபது நிமிடத்திற்கு மேல் நிதானத்தைக் கடைப் பிடிக்க முடியாத ட்ரம்ப், ஹிலரியை இடைமறித்து கருத்துக்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்.

Trump - Hillary leave the debate like Gentleman - Woman

அதே நேரம் அவற்றில் பல கலகலப்பூட்டத் தவறவில்லை. அவரது ஸ்டைலில் வெவேறு முகபாவனையுடன் குறுக்கே மறித்தபோது, நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சி போல் ஆகி விட்டது. அதிபர் தேர்தல் விவாதம் என்பது ஹிலரியைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

ஆனாலும், தேர்தல் முடிவுகளை எப்படி எதிர் கொள்வீர்கள் என்ற இறுதிக் கேள்விக்கு இருவரும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் என்றார்கள்.

'சில சமயம் வெற்றி சில சமயம் தோல்வி இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வேன்' என்றார் ஹிலரி.

'ஹிலரி நிச்சயம் ஜெயிக்க மாட்டார். ஆனால் ஒருவேளை வெற்றி பெற்றால் அவருக்கு ஆதரவளிப்பேன்,' என்று ஜென்டில்மேனாக பதிலளித்த போது ட்ரம்ப் மீது புது மரியாதை வந்தது.

நிதானமான போக்குடன் அதிபர் பதவிக்கான தகுதி படைத்தவர் என்பதை நிலை நாட்டினார் ஹிலரி.

இருவர் பேசிய விவரங்கள் ஏற்கனவே அவரகளது ஃபேஸ்புக் ட்விட்டர், இணைய தளங்களில் வெளி வந்து விட்டதால், புதிதாக எதுவும் சொல்லவில்லை என்ற ஒரு வித அயர்ச்சி பார்வையாளர்களுக்கு எழுந்ததில் ஆச்சரியமில்லை.

அடுத்ததாக துணை அதிபர் விவாதம் அக்டோபர் 4ம் தேதி நடைபெற உள்ளது.

- இர தினகர்

English summary
In the first US presidential candidates’ debate, though Trump was enthusiastic and assertive initially, became routine to his own style and looked helpless. Most of the things they talked were already shared in social media by their team and it made less interesting to viewers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X