டிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி!
அதிபர் டிரம்ப் அமெரிக்கா நாட்டிற்காகவும், உலகத்திற்காகவும் நிறைய விஷயங்களை செய்து வருகிறார் என்று பிரதமர் மோடி புகழ்ந்துள்ளது.
டெக்ஸாஸ்: அதிபர் டிரம்ப் அமெரிக்கா நாட்டிற்காகவும், உலகத்திற்காகவும் நிறைய விஷயங்களை செய்து வருகிறார் என்று பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.
ஹவுடி மோடி, இந்த ஒரு வார்த்தைதான் தற்போது அமெரிக்காவின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரத்தில் ஹவுடி மோடி விழா தற்போது நடந்து வருகிறது.
ஹவுடி மோடி நிகழ்வில் பிரதமர் மோடி தனது வரலாற்று சிறப்பு மிக்க உரையை நிகழ்த்தினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

என்ன சொன்னார்
பிரதமர் மோடி தனது உரையில், அதிபர் டிரம்ப் அமெரிக்கா நாட்டிற்காகவும், உலகத்திற்காகவும் நிறைய விஷயங்களை செய்து வருகிறார். எளிதாக அணுகக்கூடிய அதிபராக டிரம்ப் இருக்கிறார், எப்போதும் அன்புடனும், நட்புடனும் பழகுகிறார்.

கொண்டாட்டம்
வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடியவர் டிரம்ப். டொனால்ட் டிரம்ப் அதிபர் ஆவதற்கு முன்பே பிரபலமாக இருந்தார். அவர் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பிரபலமாகி இருந்தார்.சிஏஓ தொடங்கி தற்போது அதிபராக அவர் உருமாறி உள்ளார்.

உற்சாகம்
அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியவர் டிரம்ப். உற்சாகத்துடனும், துடிப்புடனும், ஆளுமையுடனும் செயல் படக்கூடியவர் டிரம்ப். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு வலுவாகி உள்ளது.

ஹவுஸ்டன் எப்படி
ஹவுஸ்டன் தொடங்கி ஹைதராபாத் வரை, பெங்களூர் வரை, நியூஜெர்சி முதல் நியூ டெல்லி வரை எல்லோரும் டிவி முன் இருக்கிறார்கள். எல்லோரும் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி அவர்களை கட்டிப்போட்டு இருக்கிறது, என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications