சிங்கப்பூரில் சந்திக்கும் கிம்-டிரம்ப்.. பாதுகாப்பு பணியில் கூர்க்காக்களை நியமித்த அரசு!
வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் வரும் ஜூன் மாதம் 12ம் தேதி சந்திப்பு நடத்த இருக்கிறார்கள்.
Recommended Video

சிங்கப்பூர்: வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சந்திக்கும் நிகழ்விற்கு பாதுகாப்பு வழங்க கூர்க்கா படை களமிறக்கப்பட்டு உள்ளது.
வரும் ஜூன் மாதம் 12ம் தேதி இருநாட்டு அதிபர்களும் சந்திப்பு நடத்த இருக்கிறார்கள். சிங்கப்பூரில் இவர்கள் இருவரும் சந்திக்க இருக்கிறார்கள்.
இதில் அணு ஆயுதங்கள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர். வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடுவது குறித்து இதில் முடிவெடுக்கப்படும்.

ஒன்றினர்
சமீப காலமாக அமெரிக்க அதிபரும், வடகொரிய அதிபரும் நண்பர்களாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இதன் முதற்கட்டமாக அணு ஆயுதங்களை மொத்தமாக கைவிட வடகொரியா முடிவு செய்துள்ளது. அதன்பின் இரண்டு நாடுகளிலும் இருக்கும் பிற எதிர்நாட்டு கைதிகளை மாற்றி மாற்றி விடுவித்தார். அமெரிக்க முதலில், தங்கள் சிறையில் இருந்து எல்லா வடகொரியா கைதிகளையும் விடுதலை செய்தது. அதற்கு அடுத்த வடகொரியாவும் தற்போது தங்கள் சிறையில் இருக்கும் அமெரிக்க கைதிகளை விடுவித்துள்ளது.

சந்திப்பு
தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் இன்னும் சில தினங்களில் சந்திக்க இருக்கிறார்கள். இரண்டு அதிபர்களும் சிங்கப்பூரில் சந்திக்க இருக்கிறார்கள். வரும் ஜூன் 12ம் தேதி இருவரும் சிங்கப்பூரில் சந்திக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இடையில் அமெரிக்க அதிபர் சந்திப்பை ரத்து செய்துவிட்டு மீண்டும் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

கூர்க்கா பாதுகாப்பு
இவர்கள் இருவரும் சிங்கப்பூரின் ஷங்கிரி லா ஹோட்டலில் சந்திக்க உள்ளனர். இதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு நாட்டு அதிபர்களும் தங்களது தனிப்பட்ட பாதுகாவலர்களை அழைத்து வருகிறார்கள். அதே சமயம் சிங்கப்பூர் சார்பாக அவர்களுக்கு கூர்க்கா பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. சுமார் 500க்கும் அதிகமான கூர்க்காக்கள் இன்றில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.

ஏன்
இவர்கள் நேபாளில் இருந்து களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள். உலகின் மிகவும் மூர்க்கமான பாதுகாவலர்கள் என்று அழைக்கப்படும் இவர்கள், முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் பல நாட்டு தலைவர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சுமார் 200 வருடமாக, உலகில் இதுவரை இவர்களின் பாதுகாப்பில் பிரச்சனையே நிகழ்ந்தது இல்லை என்பதால் இவர்களை சிங்கப்பூர் அரசு நியமித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications