முடிவுக்கு வருமா 60 ஆண்டு கால பகை.. கிம் - ட்ரம்ப் நாளை சந்திப்பு!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாளை சிங்கப்பூரில் சந்திக்கவுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ட்ரம்ப் - கிம் சந்திப்பின் மூலம் முடிவுக்கு வருமா நீண்ட கால பகை ?

    சிங்கப்பூர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாளை சிங்கப்பூரில் சந்திக்கவுள்ளனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபல் விடுதியில் நாளை சந்தித்துப் பேச உள்ளனர்.

    2011ம் ஆண்டு வடகொரிய தலைவராக பதவியேற்ற பின், அண்மையில் கிம் ஜாங் உன சீனாவிற்கு ரயிலில் பயணம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து தற்போது இரண்டாம் முறையாக கிம் ஜாங் உன் வெளிநாடு சென்றுள்ளார்.

    கிம்முடன் சந்திப்பு

    கிம்முடன் சந்திப்பு

    அவரைச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தார். வந்த உடனேயே கிம் ஜாங் உன், சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங்கை சந்தித்துப் பேசினார்.

    தனி விமானத்தில் பயணம்

    தனி விமானத்தில் பயணம்

    கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் சிங்கப்பூரின் பயா லேபர் ராணுவ விமான நிலையத்தில் நேற்று இரவு சென்றடைந்தார்.

    ட்ரம்புடன் பயணம்

    ட்ரம்புடன் பயணம்

    அவருடன் வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன், வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஆகியோரும் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.

    நாளை முதல் முறையாக

    நாளை முதல் முறையாக

    1950 - 53 காலகட்டத்தில் நிகழ்ந்த போருக்குப் பின், எதிரிகளாக இருந்து வரும் வடகொரியா - அமெரிக்கா அதிபர்கள் நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ பேச்சு நடத்தியது இல்லை. இந்நிலையில் இருநாட்டு தலைவர்களும் நாளை முதல் முறையாக சந்தித்துப் பேசவுள்ளனர்.

    பேச்சின் முக்கிய அம்சம்

    பேச்சின் முக்கிய அம்சம்

    கொரிய தீபகற்பத்தில் அமைதி ஏற்படுத்துதல், அணு ஆயுத ஒழிப்பு ஆகியவை இந்தப் பேச்சின் முக்கிய அம்சமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் பேச்சுவாத்தையின் மூலம் வடகொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொள்ளும் என கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+