பொருளாதார வல்லுநர்களை கிண்டல் செய்த டிரம்ப்.. என்னை பற்றி அவங்களுக்கு முழுசா தெரியல!
ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலைகளையும், அதன் மூலம் உணவுப் பொருட்கள் மற்றும் அன்றாட செலவுகளையும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் தொடரும் பதற்றங்கள் காரணமாக எண்ணெய் விலை குறித்த கவலைகள் அதிகரித்துள்ள இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பொருளாதார வல்லுனர்களின் கணிப்பை கிண்டல் செய்துள்ளார்.
நெவாடா மாநிலம் லாஸ் வேகாஸில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நடத்திய போர் தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை கடுமையாக ஏற்ற இறக்கம் அடைந்ததை சுட்டிக்காட்டினார். இந்த நிலைமை உலக வர்த்தகத்தை பாதித்துள்ளது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

அப்போது ஒரு மிகவும் திறமையான பொருளாதார ஆலோசகர்கள் தன்னிடம் கூறிய விஷயத்தை இந்த கூட்டத்தில் விவரித்தார். "சார், நீங்கள் இப்படி போர் தாக்குதல் செய்தால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 300 டாலர் வரை உயர்ந்துவிடும்" என்று எச்சரித்ததாகக் கூறினார்.
ஆனால் டிரம்ப் அந்த எச்சரிக்கையை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறிய டிரம்ப், அந்த திறமைமிக்க பொருளாதார ஆலோசகரிடம் "300 டாலரா.. எனக்கு அப்படி தோன்றவில்லை. போர் தாக்குதலுக்கு பின்பும் அமெரிக்கா நல்ல நிலையில் இருக்கும். அமெரிக்கா இந்த போருக்கு தாக்குதலுக்கு மத்தியில் ஒரு வழியை கண்டுபிடித்து விடுவோம்" என்று அவர் தெளிவாக பதிலளித்தாக கூறினார்.
மேலும் அந்த ஆலோசகர்கள் "சார், இதை செய்யாதீர்கள். 300 டாலர் விலை மிகப் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் மந்த நிலையை ஏற்பட்டுவிடும்" என்று எச்சரித்ததாக டிரம்ப் கிண்டலாக சொன்னார். "அது நிச்சயம் நடக்காது. ஏனென்றால் நமது பங்குச் சந்தை இப்போதுதான் புதிய சாதனை உச்சத்தை எட்டியுள்ளது" என்று தான் உறுதியுடன் தெரிவித்தாக இக்கூட்டத்தில் பேசினார்.
டிரம்ப் அதிபர் என்பதை காட்டிக்கொள்வதை விட தான் ஒரு சிறந்த பிஸ்னஸ்மேன், சிறந்த negotiator என்பதை அவ்வப்போது காட்டிக்கொள்ளக்கூடியவர். இந்த பொதுக்கூட்ட பேச்சிலும இது தான் வெளிப்பட்டு இருக்கிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நடத்திய நடவடிக்கைகள் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை கணிசமாக உயர்ந்து, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்துள்ளது.
இந்த நிலைமை உலகப் பொருளாதாரத்துக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. ஆனால் இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் இதற்கு தீர்வு காணாமல், டிரம்ப் கச்சா எண்ணெய் 300 டாலருக்கு செல்லும் என்ற பொருளாதார ஆய்வாளர்கள் கருத்தை, தான் மறுத்துவிட்டதை டிரம்ப் பெருமையாக பேசியுள்ளார்.
ஐ.நா. அமைப்புகள் இந்த போர் பதற்ற நிலைமை நீண்டகாலமாக தொடர்ந்தால் மிகப் பெரிய உணவு நெருக்கடி ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். குறிப்பாக ஹார்முஸ் வழித்தடத்தில் நெருக்கடி அதிகரித்தால் உரம் மற்றும் எரிசக்தி ஏற்றுமதி பாதிக்கப்படும். இதனால் உணவுப் பொருட்களின் விலை உயரும், பயிர் விளைச்சல் குறையும் என்று சுட்டிக்காட்டியுள்ளன. இந்த பாதிப்பு ஏழை நாடுகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை மிகவும் கடுமையாக பாதிக்கும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.















Click it and Unblock the Notifications