கண்டவுடன் சுட உத்தரவு.. டிரம்ப் அறிவிப்பால் ஈரான் அதிர்ச்சி.. ஹார்முஸ் நீரிணையில் பதற்றம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ட்ரூத் சோஷியல் தளத்தில் இரண்டு முக்கிய பதிவுகளை வெளியிட்டுள்ளார். ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கடல் கண்ணிவெடி பதிக்கும் கப்பல், படகு என அனைத்தையும் அமெரிக்க கடற்படைக்கு சுட்டு வீழ்த்த உத்தரவிட்டதாக அவர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பேச்சுவார்த்தை ரத்தானது மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்துக்கு மத்தியில் டிரம்ப்-ன் இந்த உத்தரவு உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

டிரம்ப் தனது முதல் பதிவில், "நான் அமெரிக்க கடற்படைக்கு முக்கியமான உத்தரவிட்டுள்ளேன். ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை பதிக்கும் எந்தப் படகாக இருந்தாலும், சிறிய படகாக இருந்தாலும் சுட்டு வீழ்த்துங்கள். எந்தத் தயக்கமும் கூடாது" என்று கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்க கடற்படையின் கண்ணிவெடிகளை அகற்றும் கப்பல்கள் (mine sweepers) தற்போது அந்தப் பகுதியை சுத்தப்படுத்தி வருவதாகவும், இந்த நடவடிக்கையை மும்முரமாக, தற்போதைய செயல்பாட்டை விடவும் மூன்று மடங்கு அதிக வேகத்தில் தொடர உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஈரான் தலைமைப் பிரச்சினை
டிரம்ப் தனது இரண்டாவது பதிவில், ஈரானில் யார் தலைமை என்பதில் பிரச்சினை கடுமையாக உள்ளதாகக் குறிப்பிட்டார். "Hardliners" போர்க்களத்தில் படுதோல்வியைச் சந்தித்து வருவதாகவும், "Moderates" என்று அழைக்கப்படுபவர்கள் உண்மையில் அவ்வளவு மிதவாதிகள் இல்லை என்றும் அவர் விமர்சித்தார். இரு தரப்பினருக்கும் இடையேயான உள்போராட்டம் பைத்தியக்காரத்தனமான நிலையில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஹார்முஸ் நீரிணை மீது அமெரிக்கா முழு கட்டுப்பாட்டை வைத்துள்ளதாக டிரம்ப் வலியுறுத்தினார். அமெரிக்க கடற்படையின் அனுமதி இல்லாமல் எந்தக் கப்பலும் உள்ளே நுழையவோ வெளியே செல்லவோ முடியாது. ஈரான் ஒரு ஒப்பந்தத்துக்கு வரும் வரை இந்தப் பகுதி முழுமையாக மூடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார் டிரம்ப்.
ஹார்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழியாகும். உலகின் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதி இந்தப் பகுதி வழியாகவே நடைபெறுகிறது. டிரம்ப்பின் இந்த உறுதியான நிலைப்பாடு, ஈரானுக்கு பெரும் நெருக்கடியாக மாறி வருகிறது.
இதேவேளையில் ஹார்முஸ் நீரிணை மீது ஈரான் தனது கட்டுப்பாட்டை இறுக்கமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஈரான் படைகள் ஹார்முஸ் நீரிணையில் இரண்டு கப்பல்களைப் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications