”மோடி தான் என்னுடைய சிறந்த நண்பர்..” பாகிஸ்தான் பிரதமரை பக்கத்தில் வைத்துக் கொண்டு பாராட்டிய டிரம்ப்
வாஷிங்டன்: இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான அமைதி ஒப்பந்தம் நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் கையெழுத்தானது. அப்போது பேசிய டிரம்ப், "இந்தியா மிகவும் சிறந்த நாடு. எனது மிகச் சிறந்த நண்பர் உச்ச பொறுப்பில் இருக்கிறார். அவர் (பிரதமர் மோடி) மிகவும் அற்புதமான பணிகளை செய்கிறார்" என்று பேசினார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பக்கத்தில் வைத்துக்கொண்டே டிரம்ப் இவ்வாறு பேசினார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் எகிப்தில் நேற்று கையெழுத்தானது. இதன் மூலமாக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இரு நாடுகளிலும் அமைதி திரும்பியுள்ளது.

மோடி எனது மிகச் சிறந்த நண்பர்
எகிப்தின் ஷர்ம்எல் ஷேக் நகரில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி, இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உட்பட 31 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்திவர்தன் பங்கேற்றார். இந்த மாநாட்டின் இறுதியாக காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த உச்சி மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது இந்திய பிரதமர் மோடியை டிரம்ப் வெகுவாக புகழ்ந்து பேசினார். டிரம்ப் கூறுகையில், "இந்தியா மிகவும் சிறந்த நாடு. எனது மிகச் சிறந்த நண்பர் உச்ச பொறுப்பில் இருக்கிறார். அவர் (பிரதமர் மோடி) மிகவும் அற்புதமான பணிகளை செய்கிறார். இந்தியாவும் பாகிஸ்தானும் மிகவும் நன்றாக வாழப்போகிறார்கள் என்று நினைக்கிறேன்" என்றார்.
பாகிஸ்தான் அதிபர் முன்னாடியே
டிரம்ப் இவ்வாறு பேசும் போது பக்கத்திலேயே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நின்று கொண்டு இருந்தார். உடனே திரும்பிய டிரம்ப், "அப்படித்தானே?" என்றார். இதற்கு ஷெபாஸ் ஷெரீப்பும் ஆமோதிக்கும் வகையில் தலை அசைத்தார்.
காசா அமைதி உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பதை தவிர்த்து இருந்தார். இந்தியாவின் சார்பாக வெளியுறவு இணை அமைச்சர் பங்கேற்று இருந்த நிலையிலும் கூட பிரதமர் மோடி குறித்து தனது உரையில் டிரம்ப் பேசியிருப்பது இரு தலைவர்களுக்கும் இடையே உள்ள இணக்கமான நல்லுறவை வெளிப்படுத்தும் விதமாக இருப்பதாக சர்வதேச நோக்கர்கள் கூறுகிறார்கள்.
இந்தியா மிகச் சிறந்த நாடு
அதேவேளையில், டிரம்ப் பல்வேறு இடங்களில் "இந்தியா மிகச் சிறந்த நாடு", "மோடி எனது அருமை நண்பர்" என்று புகழாரம் சூட்டினாலும், வரி விதிப்பு விவகாரங்களில் பிற நாடுகளை விட மோசமாக இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில், அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் வழியாக பிரதமர் மோடிக்கு டிரம்ப் தனது கையெழுத்திட்ட புகைப்படம் ஒன்றை அனுப்பி வைத்தார். அதில், "மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்... நீங்கள் மிகச்சிறந்தவர்" என்று எழுதப்பட்டு இருந்தது.
முன்னதாக டிரம்ப் பாகிஸ்தான் தலைவரையும் பாராட்டி பேசினார். பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிப் முனீரை புகழ்ந்து பேசிய ட்ரம்ப், ஆசிப் முனீர் தனக்கு பிடித்தமான ஃபீல்டு மார்ஷல் என்று கூறினார்.
-
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்!












Click it and Unblock the Notifications