ஜெர்மனி ஜி20 உச்சி மாநாட்டில் டிரம்ப் - புதின் ரகசிய உரையாடல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் புதின் இந்த மாதம் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் முன்பு வெளியில் அறிவிக்கப்படாத கூட்டம் ஒன்றில் இரண்டாவது முறையாக சந்தித்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு அதிகாரபூர்வ அமர்விற்கு பிறகு இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்து வெள்ளை மாளிகை எதையும் வெளியிடவில்லை.
- ஜி20 மாநாட்டில் டொனால்ட் டிரம்ப் இருக்கையில் இவாங்கா டிரம்ப்
- பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அதிபர் டிரம்ப் ஜி20 உச்சி மாநாடு குறித்து பெருமிதம்
இந்த ரகசிய பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை ''போலியான செய்தி'' என்று கூறி மறுக்கிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் உதவிக்கு ரஷ்யா உதவியது என்று அமெரிக்க புலனாய்வு நிறுவனம் நம்புகிறது. ஆனால், அதனை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதே போன்று டொனால்ட் டிரம்பும் ரகசிய அல்லது சட்டவிரோத ஒத்துழைப்பை நிராகரித்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் ஹாம்பர்க்கில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் நாடுகளின் தலைவர்களிடையே நடைபெற்ற தனிப்பட்ட விருந்தின் போது டிரம்ப் மற்றும் புதினின் இரண்டாவது சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
- டிரம்பும், புதினும் முதல்முறையாக நேருக்கு நேர் சந்திப்பு
- ரஷியாவுடன் மேலும் ஆக்கப்பூர்வமாக பணிபுரிய வேண்டும்: டிரம்ப்
இந்த சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியாக இருந்துள்ளார். ரஷ்ய அதிபர் புதினுடன் அவருடைய அதிகாரபூர்வ மொழி பெயர்ப்பாளரும் உடனிருந்தார். இந்த கூட்டம் சுமார் ஒருமணி நேரம் நடைபெற்றதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பேச்சுவார்த்தையின் போது அதிபர் டிரம்ப்பை தவிர்த்து வேறு உதவியாளர்கள் யாரும் இல்லாதததால், கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்த ஒரே தரப்பு தகவலை வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு டிரம்ப்பே வழங்கியுள்ளார்.
பிற செய்திகள்:
- மனைவியின் படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு சிக்கலில் மாட்டிய இர்ஃபான் பதான்
- கவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண் மீது சௌதியில் விசாரணை
- இறந்துபோன மகனின் இதயம் நேரில் வாழ்த்த திருமணம் செய்துகொண்ட தாய்
- இந்தியாவில் வசிக்கும் ஆஃப்ரிக்க பழங்குடியின மக்கள்
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்














Click it and Unblock the Notifications