அரசியல்வாதிகளால் அமெரிக்கர்கள் சலிப்படைந்து விட்டனர். ட்ரம்ப் வெற்றி உறுதி – மகன் கணிப்பு!
வாஷிங்டன்(யு.எஸ்): கடும் போட்டி நிலவும் மாநிலங்களில் வெற்றி பெற்று டொனால்ட் ட்ரம்ப் அதிபராவார் என்று அவருடைய மகன் எரிக் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு செவ்வாய்க்கிழமை காலை அளித்த பேட்டியில் எரிக், தனது தந்தையின் வெற்றி நிச்சயம் என்று கூறியுள்ளார்.மொத்த இலக்கான 270 அதிபர் வாக்குகளைப் பெற 6 அல்லது 7 வழிகள் அவர்களுக்கு உள்ளது.

நெவடாவில் இதுவரையிலும் குடியரசுக்கட்சி வெற்றி பெற்றதில்லை. அங்கும் வெற்றி பெற்று அதிபர் இலக்கு வாக்குகளை அடை ஃப்ளோரிடாவிலும் ட்ரம்பின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் திரளாக சென்று அங்கு வாக்களித்து வருகிறார்கள். நாடெங்கிலும் நான் பயணம் செய்து வந்துள்ளேன். வாஷிங்டன் டிசி யில் உள்ள ஆண்டாண்டு கால அரசியல்வாதிகள் மீது மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். அந்த கோபம் இந்த தேர்தலில் வெளிப்படும்.
டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எரிக் கூறியுள்ளார். ஃப்ளோரிடாவிலும் நெவடாவிலும் வென்றால் கூட, ஒஹாயோ, மிஷிகன், பென்சில்வேனியா மாநிலங்களிலும் வெற்றி பெற்றால் தான் ட்ரம்பின் அதிபர் கனவு நனவாகும்.
மிஷிகன் மற்றும் பென்சில்வேனியாவில் ஹிலரி முன்னிலையில் இருக்கிறார். ஒஹாயோவில் ட்ரம்ப் முன்னிலை என்று கூறப்பட்டாலும் இன்னும் இழுபறி நிலை நீடிப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இன்னும் 6 மணி நேரத்தில் முடிவுகள் வெளிவரத் தொடங்கும். 12 மணி நேரத்திற்குள் அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்று தெரிந்து விடும்.
-நமது அமெரிக்க செய்தியாளர்..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications