டெஸ்லாவை தூக்கி சாப்பிட்ட பிஒய்டி.. 'சீனா'ன்னா சும்மாவா? புலம்பும் எலான் மஸ்க்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: உலக நாடுகளுக்கெல்லாம் பஞ்சாயத்து தலைவராக, தன்னை டிரம்ப் காட்டிக்கொண்டாலும், அவர் ஆட்சி செய்யும் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி, சீனா பல துறைகளில் கெத்து காட்டி வருகிறது. இப்போது ஆட்டோமொபைல் துறையிலும், அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தை சீனாவின் பிஒய்டி பின்னுக்கு தள்ளியுள்ளது.

டெஸ்லாவின் சைபர் டிரக் விற்பனைக்கு வந்தபோது, ஆஹா, ஓஹோ என்று பேசப்பட்டது. தொடக்கத்தில் இந்த பில்டப் எல்லாம் நன்றாகவே வேலை செய்தது. ஆனால், சீனா உள்ளே வந்தபோது மார்க்கெட் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

china US tesla

இந்த ஆண்டு மட்டும் ஜனவரி தொடங்கி ஜூன் வரை டெஸ்லா நிறுவனம் 336,681 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் தலைவன் பிஒய்டி, 416,388 கார்களை விற்பனை செய்திருக்கிறான். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் விலை குறைவுதான். டெஸ்லாவின் Model 3 விலை 32,500 அமெரிக்க டாலருக்கு விற்பனை ஆன நிலையில், பிஒய்டி தனது Qin L மாடலை 16,500 அமெரிக்க டாலருக்கு களத்தில் இறக்கியது. இந்த குறைந்த விலை காரணமாக, சீன கார்கள் மளமளவென விற்பனை ஆகின.

மற்றொரு சிறப்பம்சம் குறைந்த நேரத்தில் அதிக தூரம் வரை செல்ல உதவும், பாஸ்ட் சார்ஜிங் வசதி. டெஸ்லா கார்களை 15 நிமிடம் சார்ஜ் செய்தால், 270 கி.மீ வரை போக முடியும். அதுவே பிஒய்டி கார்கள் 400 கி.மீ வரை போகும். இதுபோதுமே, சென்னையிலிருந்து நாகர்கோவில் போக வேண்டும் எனில், நடுவில் திருச்சியில் நிறுத்தி ஒரு 'டீ' அடித்தால் போதும். அந்த நேரத்தில் ஏறும் சார்ஜை வைத்துக்கொண்டு நாகர்கோவிலுக்கு போய்விடலாம்.

அதேபோல தானியங்கி முறைக்கு டெஸ்லா கார் பெயர் பெற்றது என்று சொல்லப்பட்டிருந்த நிலையில், பிஒய்டி காரும் தானியங்கி முறையை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது.

இவ்வளவு அம்சங்கள் இருப்பதால் ஐரோப்பிய நாடுகளிலும் பிஒய்டி விற்பனை சக்கைபோடு போட்டு வருகிறது. கடந்த ஆண்டு பிஒய்டி விற்பனை 29% வரை ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து, டெஸ்லா விற்பனையை முறியடித்திருந்தது. மறுபுறம் டெஸ்லா விற்பனை சுமார் 40% வரை குறைந்திருக்கிறது.

உலகம் முழுவதும் எவ்வளவோ கார் கம்பெனிகள் இருக்கின்றன. அந்த கம்பெனிகள் எல்லாம் தினம் தினம்தான் லாபம், நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அப்படி இருக்கையில் பிஒய்டி கார் நிறுவனம் விற்பனையில் புதிய உச்சத்தை எட்டியிருப்பது, அவ்வளவு பெரிய ஆச்சரியமா? என்று கேட்க தோன்றலாம்.

இதில் விஷயம் இருக்கிறது மக்களே. அதாவது, என்னதான் சீனாவின் எலக்ட்ரானிக் பொருட்கள் உலகம் முழுவதும் தவிர்க்க முடியாததாக இருந்தாலும், ஆட்டோமொபைல் என்றால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்தான். நேற்று வரை இந்த கெத்தை மெயின்டெயின் செய்து வந்த இந்த நாடுகள், தற்போது அதை இழந்திருக்கின்றன. ஒரு ஆசிய நாடு உலக அளவில் ஆட்டோமொபைல் துறையில் முன்னணியில் வருவதெல்லாம் சாதாரண விஷயமில்லை. அந்த வகையில் சீனா தரமான சம்பவத்தை செய்திருக்கிறது.

இதில் மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், டெஸ்லா ஓனர் எலான் மஸ்க்குக்கும், டிம்புக்கும் இடையே முட்டிக்கொண்டிருக்கிறது. எனவே டெஸ்லா கார் விற்பனைக்கு அமெரிக்க அரசு எந்த அளவுக்கு சப்போர்ட் செய்யும் என்று தெரியாது. மானியங்கள் கூட நிறுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் எலான் மஸ்க் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்.

மறுபுறம் சீனாவின் பிஒய்டி நிறுவனம் அப்படி கிடையாது. அந்நிறுவனத்திற்கு சீனா தாராளமாக நிதியுதவி செய்து வருகிறது. இதுவும் பிஒய்டி விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+