நான் முட்டாள் இல்லை.. ரொம்பவே புத்திசாலி.. என்னை நம்புங்கள்.. டிரம்ப் கெத்து பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை பற்றி எழுதப்பட்டு இருக்கும் புத்தகம் குறித்து பேசி இருக்கிறார்.
நியூயார்க்: என்னதான் உலகத்தையே மிரட்டிக் கொண்டு இருந்தாலும் சில தலைவர்கள் சின்ன சின்ன விஷயத்தை பார்த்துக் கூட பயப்படுவார்கள். சிலருக்கு எங்கிருந்தோ வந்த பிரச்சனை பெரிய பூதாகரமாக தொல்லை கொடுக்கும்.
அப்படித்தான் தற்போது டிரம்ப் பெரிய பிரச்சனையில் மாட்டி இருக்கிறார். டிரம்ப் குறித்து மைக்கேல் வுல்ப் என்ற பத்திரிக்கையாளர் எழுதி இருக்கும் 'பயர் அண்ட் ஃபுரி: இன்சைட் தி டிரம்ப்ஸ் வொயிட் ஹவுஸ்' என்ற புத்தகம் அவருக்கு பெரிய தொல்லையாக மாறி இருக்கிறது.
டிரம்ப் குறித்த பல முக்கியமான தகவல்கள் இந்த புத்தகத்தில் இருக்கிறது. இதற்கு தற்போது டிரம்ப் எதிர்வினையாற்றி இருக்கிறார்.

முக்கியமான விஷயம்
இந்த புத்தகத்தில் டிரம்ப் குறித்து நிறைய தகவல்கள் இருக்கிறது. டிரம்ப் எந்த அளவிற்கு உயிர்க்கு பயப்படுவார், அவர் ஒரு சினிமா பைத்தியம், வெள்ளை மாளிகையில் இருக்க அவருக்கு பிடிக்காது என நிறைய விஷயங்கள் இருந்தது. முக்கியமாக அவரது மகள் இவாங்கா டிரம்ப்பே அவரது பதவியை பறிக்க நினைத்தார் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மனநலம் இல்லை
டிரம்ப்பிற்கு போதிய அளவிற்கு அறிவு இல்லை என்றும் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி அவர் கொஞ்சம் மனம்பிறழ்ந்தவர் என்று மோசமாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த தகவல் அமெரிக்கா முழுக்க வைரல் ஆகி இருக்கிறது.

பதில் என்ன
இதற்கு டிரம்ப் ''நான் ஒன்றும் முட்டாள் இல்லை. பைத்தியமும் இல்லை. நான் புத்திசாலி. அதனால் தான் தொழிலதிபராக இருந்து பின் சினிமாவில் பெரிய நபராக மாறி தற்போது அமெரிக்க அதிபராக மாறியுள்ளேன். முக்கியமாக நான் புத்திசாலியாக இருப்பதால்தான் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்தேன்'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

எல்லாமே பொய்
மேலும் ''அந்த புத்தகத்தில் இருக்கும் விஷயங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய். எல்லாமே கற்பனையாக எழுதப்பட்டது'' என்றும் குறிப்பிட்டார். ஆனால் இந்த புத்தகம் ஒரே நாளில் வைரலாகி இருக்கிறது. ஹாரிபாட்டர் புத்தகத்தை விட முதல் இரண்டு நாட்களில் அதிகம் விற்பனை ஆகி இருக்கிறது. அமெரிக்காவின் 'பெஸ்ட் செல்லர்' இதுதான் என்று கூறப்பட்டு உள்ளது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரியை 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!











Click it and Unblock the Notifications