வர்த்தக போரை தொடங்கிய டிரம்ப்.. இந்தியாவிற்கு வரப்போகும் சிக்கல்.. சோஹோ ஸ்ரீதர் வேம்பு வார்னிங்
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு காரணமாக இந்தியாவில் பொருட்களின் விலை தற்காலிகமாக உயரும் வாய்ப்புகள் இருப்பதாக சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் வரி விதிப்பு காரணமாக பின்வரும் மாற்றங்கள் ஏற்படும் என்று சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அதன்படி நாம் அமெரிக்காவிற்கு மென்பொருட்கள் சர்வீஸ்களை ஏற்றுமதி செய்கிறோம். சீனாவில் இருந்து சரக்கு பொருட்களை இறக்குமதி செய்கிறோம். இப்போது அமெரிக்காவின் வரி விதிப்பால்.. இப்போது இந்தியா இருதரப்பு வர்த்தகத்தை சமப்படுத்த அமெரிக்காவிலிருந்து அதிக ஐபோன்கள், ஜிபியுக்கள், எல்பிஜி, அணுமின் நிலைய சேவைகள், போர் விமானங்கள், விஸ்கி போன்றவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அதே சமயம் நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்காமல் இருக்க, சீனாவில் இருந்து நுகர்வோர் பொருட்களை இறக்குமதி செய்வதை குறைப்பதற்கான வழிகளை இந்தியா கண்டுபிடிக்க வேண்டும், அதாவது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இது ஒரே இரவில் நடக்க முடியாது என்பதால், குறுகிய காலத்தில் இறக்குமதி செய்யப்படும் நுகர்வோர் பொருட்களின் விலைகள் உயரக்கூடும். இது பணவீக்கமாக உருவெடுக்கும், என்று சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பொருட்கள் மீதான வரி குறைப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்திய நிலையில், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை இந்தியா குறைக்க தொடங்கி உள்ளது. அமெரிக்கா இந்தியாவின் வரி விதிப்பை விமர்சனம் செய்த நிலையில்.. இந்தியா வரியை குறைக்க தொடங்கி உள்ளது.
போர்பன் விஸ்கி மீதான வரியை இந்தியா 150%ல் இருந்து 100% ஆக குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு Suntory's Jim Beam போன்ற பிரபல அமெரிக்க பிராண்டுகளின் இறக்குமதிக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் பொருட்களுக்கு, குறிப்பாக மதுபானத் துறையில் இந்தியாவின் நியாயமற்ற வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
போர்பன் விஸ்கியின் அடிப்படை சுங்க வரி இப்போது 50% ஆகவும், கூடுதலாக 50% வரியுடன் மொத்தம் 100% ஆகவும் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு முன்பு, இந்த இறக்குமதிகளுக்கு 150% வரி விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வரி குறைப்பு போர்பனுக்கு மட்டுமே பொருந்தும், மற்ற மதுபான பொருட்களுக்கான கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. அவற்றிற்கு தொடர்ந்து 150% வரி விதிக்கப்படும்.
வரி விதிப்பு எச்சரிக்கை
இந்தியா அமெரிக்காவின் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கிறது. இந்தியா விதிக்கும் வரிக்கும் இணையாக இனிமேல் அமெரிக்காவும் இந்தியாவின் பொருட்கள் மீது வரி விதிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மோடியை சந்திக்கும் முன்.. பொதுவாக எதிரி நாடுகளை விட நட்பு நாடுகள்தான் அதிகம் எங்களை பாதிக்கின்றன. ஹார்லி டேவிட்சன் பைக்குகளை இந்தியாவில் விற்க முடியவில்லை. காரணம் கடுமையான வரி. இதனால் அந்த பைக்குகள் உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இதேதான் டெஸ்லாவிற்கும். அப்படி என்றால் இனி நாங்களும் அதேபோன்ற வரிகளை விதிப்போம் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
வரி விதிப்பு
பரஸ்பர வரிகளை விதிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்தால் இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள்தான் அதிக ஆபத்துகளை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் மார்கன் ஸ்டான்லி முதல் நோமுரா ஹோல்டிங்ஸ் இன்க் ஆகியோர் எச்சரித்து உள்ளனர்.
இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும் அமெரிக்கா மீது அதிக வரிகளை விதிக்கின்றன. 10-25 சதவிகிதம் வரை பல பொருட்கள் மீது இரண்டு நாடுகளும் அமெரிக்கா மீது விதிக்கின்றன. இப்போது பரஸ்பர விதிகள் காரணமாக இதே அளவிலான விதிகளை இந்தியா, தாய்லாந்து மீது அமெரிக்கா விதிக்கும். இப்போது 10%க்கும் கீழ்தான் இந்தியா, தாய்லாந்து பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்கிறது. அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா விதிக்கும் சராசரி விகிதம், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியை விட 10 சதவீத புள்ளிகளுக்கும் அதிகம் ஆகும்.
டிரம்ப்பின் வரி விதிப்பு காரணமாக இந்தியா, தாய்லாந்து பொருட்கள் விற்பனை குறையும். இதனால் இப்போதுதான் ஏற்றுமதியில் வேகம் எடுக்கும் இரண்டு நாடுகளும் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும். நாங்கள் மற்ற நாடுகளை சமமாக நடத்த விரும்புகிறோம், என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார். இறக்குமதி - ஏற்றுமதி வரியில் டிரம்ப் கண்டிப்பானவர். இந்தியா இறக்குமதி வரியை குறைக்கவில்லை என்றால்.. டிரம்ப் வரியை ஏற்றுவார். இதனால் இந்தியாவில் பொருட்களின் விலை உயரலாம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட வரி விதிக்கப்படும் நாடுகளின் முதல் லிஸ்டில் இந்தியாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications